செவ்வாய், 3 ஜனவரி, 2017

காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணியா? .. திருநாவுக்கரசர் மிகவும் ஆர்வமாக 7ம்தேதி காங்கிரஸ் செயற்குழு...

சென்னை : அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்க, தமிழக காங்., செயற்குழு, வரும், 7ம் தேதி, சென்னையில் கூடுகிறது. கூட்டணி? உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்., கட்சிக்கு, 2 சதவீத இடங்களே ஒதுக்கப்பட்டதால், அக்கட்சி, தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 'தனித்து போட்டியிடலாம் அல்லது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கலாம்' என, மாநில தலைவர் திருநாவுக்கரசரிடம், நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். செயற்குழு கூட்டம்: அதற்கேற்ற வியூகம் வகுக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம், திருநாவுக்கரசர் தலைமையில், வரும், 7ம் தேதி, சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது. மேலிட தலைவர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.இதில், உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.தினமலர

கருத்துகள் இல்லை: