
பொதுக் குழுவுக்கு நீங்கள் போக வேண்டாம் என சொன்னவரும் ஜமால்தான். அடுத்த கட்டமாக, கட்சியின் பொதுச் செயலராக சசிகலா ஜனவரி 2ல், மாலை 6:30 மணிக்கு பொறுப்பேற்றுக் கொள்ள, நேரம் பார்த்துச் சொன்னவர், 30ம் தேதியே பொறுப்பேற்றுக் கொள்ள மாற்றிச் சொன்னவரும் ஜமால்தான். அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படியே சசிகலா செய்யத் துவங்கி உள்ளார்.
அவர் தற்போதைக்கு முதல்வராக பொறுப்பேற்க வேண்டாம் எனவும் சசிகலாவை அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில், அரசியல் ரீதியில் செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் செய்து முடித்து விட்டு, தன்னிடம் சொன்னால், அதற்கேற்ப, பதவியேற்பு விழா நடத்த நாள், நட்சத்திரம் பார்த்து சொல்வதாகக் கூறியுள்ளாராம். இதனாலேயே, சசிகலா முதல்வராவது தள்ளிப் போவதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
போயஸ் தோட்டத்துக்கு ஒவ்வொரு முறை ஜமால் செல்லும்போதும், சூட்கேசுடன் செல்கிறார். அதனால், சூட்கேஸ் ஜோதிடர் என, போயஸ் தோட்டத்துக்கு வெளியே காவலுக்கு நிற்கும் போலீசார் செல்லமாக அழைக்கின்றனர். சசிகலாவின் ஆதரவும் ஜமாலுக்கு இருப்பதால், தற்போதைய பன்னீர்செல்வம் ஆட்சியிலும், ஜமால் கொடி உயரப் பறக்கிறதாம். தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக