ஞாயிறு, 6 நவம்பர், 2016

முட்டுக்கட்டை போடும் குடும்பம் : ஸ்டாலினுக்கு எதிராக திரும்புவது ஏன்?

தி.மு.க.,வை முழுமையாக கையில் எடுக்கும் முயற்சிக்கு, குடும்பத்தினர் முட்டுக்கட்டை போடுவதால், அக்கட்சியின் பொருளாளர், ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'தன் அரசியல் வாரிசு ஸ்டாலின்' என, சமீபத்தில் கூறிய பின், கட்சியினர் அனைவரும் அவருக்கே முக்கியத் துவம் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, கட்சி யின் அனைத்து நடவடிக் கைகளும், அவரை சுற்றியே நடக்க துவங்கி உள்ளன. அதனால், குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர்கள், ஸ்டாலின் நடவடிக்கை களுக்கு, பல வகைகளிலும் முட்டுக்கட்டை போடுவதால், குடும்பத்தினர் மீது கடும் கோபம் அடைந்துள்ளார் ஸ்டாலின்.

தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கருணா நிதிக்கு, 93 வயதாகும் நிலையில், அவரால்
கட்சித் தலைவராக இருந்து, எல்லா பணி களிலும் கவனம் செலுத்த முடியவில்லை.இதனால்,தலைவர் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும், ஸ்டாலின் தான் முன்னின்று செய்கிறார்.

காவிரி பிரச்னை தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டம் கூட்டிய ஸ்டாலின், அது தொடர்பாக, அடுத்தடுத்து காரியங்களை செய்து கொண்டிருக்கி றார்.அதேபோல, தமிழக அரசுக்கு எதிரான விமர் சனங்கள், போராட்டங்கள் அனைத்துமே, தற்போது, ஸ்டாலின் தலைமையிலேயே நடைபெறுகிறது.

'சட்டசபை குழுக்கள் அமைக்கவில்லை' என, சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நிலைப்பாடு, புகார் அளிப்பு எல்லாமே, அரசியல் ரீதியில், தி.மு.க.,வின் செயல்பாட்டை நிலை நிறுத்தி உள்ளது.

இதையெல்லாம், ஸ்டாலின் முன்னின்று செய்வதை, குடும்பத்தினர் விரும்பவில்லை. கட்சியி லும், வெளியேயும் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கிடைப்பது, தங்களுக்கான முக்கியத்துவத்தை குறைக்கும் என, நினைக்கின்றனர்.

அதற்காகவே, உடல் நிலை சரியில்லாத சூழலி லும், கருணா நிதியை, அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் வலிந்து நுழைக்கின்றனர்.

காவிரி பிரச்னை என, பல விஷயங்களில், கருணா நிதி அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதற்காக, அவர் நிறைய சிரமப்பட்டதாக தகவல்.கருணாநிதிக்கு உடல் நிலை சரியில் லாத சூழலை பயன்படுத்தி, குடும்பத்தில் இருந்தே மொத்தமாக விலகி நிற்கும் அழகிரி யை, சென்னைக்கு வரவழைத்தனர்; அவரும் கருணாநிதியை சந்தித்து, உடல் நலம் விசாரித்து, அரசியலும் பேசிச் சென்றார்.

இப்படி, கட்சிக்குள் ஸ்டாலின் செயல்பாடு களுக்கு முட்டுக்கட்டை போடும் குடும்பத்தினர், .இதையெல்லாம் அறிந்த ஸ்டாலின், குடும்பத் தினர் மீது கடும்அதிருப்தியில் உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் - தினமலர்,காம்

கருத்துகள் இல்லை: