வெள்ளி, 9 செப்டம்பர், 2016

காவிரி .. தேவ கவுடா மோடியை சந்திக்கிறார் .. அதான் சு.சாமி கடல் தண்ணிய பயன்படுத்த சொல்லிட்டார்

டெல்லி: காவிரிப் பிரச்சினை தொடர்பா கர்நாடகத்தில் இன்று பந்த் நடத்தப்பட்டு வரும் நிலையில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார். காவிரிப் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கர்நாடகத்தின் நிலையை விளக்கவுள்ளதாக கெளடா தரப்பு தெரிவிக்கிறது. தமிழகத்திலிருந்து ஒரு தலைவரும் சென்னையை விட்டு வெளியே வரவில்லை. அறையில் அமர்ந்து கொண்டு அறிக்கை அறிக்கையை அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகத் தலைவர்கள் எங்கெல்லாம் ஓட முடியுமோ அங்கெல்லாம் ஓடுகிறார்கள். முன்னாள் பிரதமர் தேவெ கெளடா இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். gowda கர்நாடகத்தின் நிலையை பிரதமரிடம் விளக்கி, தமிழகத்திற்குக் கூடுதல் நீர் திறக்க முடியாத நிலையில் கர்நாடகம் இருப்பதை அவர் பிரதமரிடம் விளக்கவுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் தமிழகத்திற்குக் கூடுதல் நீரைத் திறந்து விடாத வகையில் பிரதமர் மூலம் நடவடிக்கை எடுக்க கெளடா முயல்வதாக தெரிகிறது. காவிரி கண்காணிப்புக் குழு 12ம் தேதி கூடவுள்ள நிலையில் பிரதமரைச் சந்தித்து அவர் மூலம் காவிரிக் கண்காணிப்பு குழுவின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்த கெளடா முயல்வதாக கருதப்படுகிறது.

Read more at:  tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: