

இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சிகளை முன்னிட்டு இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் எப்போதுமே அதன் இயல்பு வாழ்வை குலைத்து பதற்றத்தை உருவாக்கும் விழாக்களாக முத்துராமலிங்க தேவர் குரு பூஜையும், இமானுவேல் சேகரன் நினைவு நாள் பூஜையும் இருக்கின்றன.பரமக்குடியில் செப்டம்பர் 11 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் 30இல் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை விழாவை முன்னிட்டு, இன்று (செப்டம்பர் 9) முதல் இரண்டு மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் பிறப்பித்தார்.
செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தவரும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல வேண்டும். நினைவிடத்தில் மாலை நான்கு மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக