டெல்லி குழந்தைகள் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் சந்தீப் குமார் குறித்த ஆபாச சிடி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிடியில் அமைச்சர், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளும், புகைப்படங்களும் இருந்தது. ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் இந்த வீடியோ வெளியானது.
இந்நிலையில், சந்தீப் குமார் தொடர்பான ஆபாச வீடியோவில் அவருடன் நெருக்கமாக இருக்கும் பெண் டெல்லி சுல்தான்புரி போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த ஆண்டு ரேசன் கார்டு தொடர்பாக அமைச்சர் சந்தீப் குமாரை அணுகியபோது அவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டினார்.
அதன் அடிப்படையில் சந்தீப் குமார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுபற்றி அறிந்த சந்தீப் குமார் டெல்லி புறநகர் துணை கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று சரணடைய வந்தார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். tamiloneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக