சனி, 10 செப்டம்பர், 2016

மாரியப்பனுக்கு 2 கோடி பரிசு : ஜெயலலிதா அறிவிப்பு

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் ஆக மொத்தம் 2 பதக்கம் கிடைத்தன. பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளியும், மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் வெண்கல பதக்கமும் பெற்றனர். இதை தொடர்ந்து ரியோ நகரில் மாற்றுதிறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. 18-ந்தேதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் ரியோடி ஜெனீரோ நகரில் நடக்கிறது.
இதில் இந்தியா சார்பில் 16 வீரர்களும், 3 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 19 பேர் பங்கேற்று உள்ளனர். இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார். உயரம் தாண்டும் போட்டியில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். இந்தியாவை பெருமைப்பட வைத்த 21 வயதான மாரியப்பன் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர். பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு மத்திய அரசு 75 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளார்
 nakkheeran,in

கருத்துகள் இல்லை: