திங்கள், 5 செப்டம்பர், 2016

உபி, டெல்லி அரசுகள் சமோசாவுக்காக மக்கனின் வரிப்பணம் விரயம்.

minnnambalam.com அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த 18 மாதங்களில் கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகளுக்காக சமோசா, தேநீருக்காக ரூபாய் ஒரு கோடி செலவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விவேக் கர்க் என்பவர் அந்த மாநில மந்திரிகள் டீ மற்றும் சமோசாவுக்கு செய்துள்ள செலவு விவரங்களை தெரிவிக்குமாறு தகவல் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு டெல்லி அரசின் பொது நிர்வாகத் துறை துணைச் செயலாளர் கிருஷ்ணலால் அளித்த பதிலில், “டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தன்னை பார்க்க வந்த விருந்தினர்களுக்கு சமோசா, தேநீருக்காக மொத்தம் ரூ.47.29 லட்சம் செலவு செய்து இருக்கிறார்.
துணை முதல் மந்திரி மனிஷ்சிசோடியா ரூ.11.28 லட்சமும், பதவி நீக்கம் செய்யப்பட்டகோபால்ராய் ரூ.11.06 லட்சமும், சந்தீப் குமார் ரூ.9.11 லட்சமும் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் ரூ.9.10 லட்சமும் சுற்றுலாத்துறை மந்திரி மிஸ்ரா ரூ.6.30 லட்சமும் செலவு செய்து இருக்கிறார்கள். குறைந்த பட்சமாக உணவுத்துறை மந்திரி இம்ரான் உசேன் மட்டும் ரூ.5.89 லட்சம் செலவு செய்து இருக்கிறார்” என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: