செவ்வாய், 6 செப்டம்பர், 2016

கர்நாடகம்: 9ஆம் தேதி பந்த், அணையும் மூடப்பட்டது!


காவிரியில் இருந்து விநாடிக்கு 15,000 கன அடி நீரை 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று இடைக்கால தண்ணீர் நிவாரணத்தை அறிவித்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில் தீர்ப்பு வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் கர்நாடகம் முழுக்க போராட்டங்கள் வெடித்தன. ஆங்காங்கே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியைக் கொளுத்தி போராட்டங்களை நடத்தினர் கர்நாடக அமைப்பினர். பாஜக, கன்னட சளுவாலியா போன்ற அமைப்புகள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளன.

வருகிற 9ஆம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்துக்குக் கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்பேட், உப்பள்ளி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு கிருஷ்ணராஜசாகர் அணையும் அதை ஒட்டிய பூங்காவும் மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்படாமல் மூடப்பட்டுள்ளது. தமிழக, கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவுவதால் நேற்று மாலை முதல் இரு மாநிலங்களுக்கும் இடையிலான பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: