
சென்னை: சேட்டைக்கார நடிகையா, ஆமாம் சமத்து நடிகை செய்வதை எல்லாம்
பார்ப்பவர்கள் அவரை அவ்வாறு தான் கூறுகிறார்கள். சமத்தான நடிகை படுத்தும்
பாட்டை நினைத்து தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.
தெலுங்கு திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் சமத்தான நடிகை. தற்போது
அவருக்கு தெலுங்கில் மவுசு குறைந்துவிட்டது. இத்தனை நாளாக அவர்
கோலிவுட்டில் வெற்றி பெற துடித்துக் கொண்டிருந்தார். அவர் ஆசைப்படி ஒரு
படம் வெற்றியும் அடைந்துள்ளது(?).
இதையடுத்து தற்போது அவர் கையில் 3 தமிழ் படங்கள் உள்ளன. இந்நிலையில் அம்மணி
தேவையில்லாத பல அலப்பரைகளை செய்து சொந்த செலவில் சூனியம் வைத்துக்
கொண்டிருக்கிறாராம்.
படப்பிடிப்புக்கு வருகையில் கையோடு ஒரு சமையல்காரரை அழைத்து வந்து
அவருக்கான செலவை தயாரிப்பாளர் தலையில் கட்டுகிறாராம்.
மேலும் தற்போது ஒரு
ஜிம் மாஸ்டரை அழைத்து வந்து அவர் தங்க, சாப்பிட, பயணம் செய்ய என அனைத்து
செலவையும் தயாரிப்பாளரை ஏற்க வைக்கிறாராம் நடிகை.
இந்த சேட்டை எல்லாம் போதாது என்று தமிழில் முன்னணி நடிகையாக உள்ள ஒருவருடன்
வேறு மோதல்.
ஒத்த படம் ஹிட்டானதுக்கே இந்த அலப்பரையா. இதே போன்று தொடர்ந்து செய்தால்
நடிகையின் கோலிவுட் கனவில் மண் தான் விழும் என்கிறார்கள் விவரம்
அறிந்தவர்கள்.
tamil.filmibeat.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக