வியாழன், 19 மார்ச், 2015

கார்களில் சிவப்பு விளக்கு பொருத்த 9 விவிஐபிகளுக்கு மட்டும் அனுமதி?

மத்தியில் உயர் பதவியில் இருக்கும் 5 விவிஐபிக்கள், மாநிலத்தில் 4 விவிஐபிக்கள் மட்டும் சிவப்பு விளக்கு பயன்படுத்த அனுமதிக்கலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி மத்தியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும், மாநிலங்களில் கவர்னர், முதல்வர், சட்டசபை சபாநாயகர் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதி
புதுடெல்லி: அரசியல் அமைப்பு சட்ட அங்கீகாரம் பெற்ற உயர் பதவி வகிப்பவர்கள் மட்டுமே கார்களில் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்த அனுமதிக்க வேண்டும் என  சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து மத்தியில் உயர்பதவியில் இருக்கும் 5 விவிஐபிக்கள், மாநிலத்தில் 4 விவிஐபிக்கள் என மொத்தம் 9 பேருக்கு மட்டுமே  கார்களில் சிவப்பு விளக்கு பொருத்த அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் மற்ற  அமைச்சகங்களின் கருத்தை கேட்டுள்ளது.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், நீதிபதிகள், முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், மாவட்ட  கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளில் டிஜிபிகள் முதல் எஸ்பிக்கள் வரை என பல விஐபிக்கள் தற்போது கார்களில் சுழலும் சிவப்பு விளக்கை பயன்படுத்தி  வருகின்றனர். அரசு வக்கீல்கள், தலைமை செயலர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், மேயர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே  சென்றுள்ளது. அதிகமானவர்கள் சிவப்பு விளக்கை பயன்படுத்துவதால், யார் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை. இதனால், சிவப்பு  விளக்கு பயன்படுத்த அனுமதி உள்ளவர்கள் மட்டும் அல்லாது அனுமதி இல்லாத பல அதிகாரிகள், அரசியல்வாதிகளும் சிவப்பு விளக்கை பயன்படுத்தி வருகின்றனர்.  அவர்களுக்காக போக்குவரத்து நிறுத்தப்படும் போது பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

கார்களில் சிவப்பு விளக்கு பொருத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என கடந்த 2013ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம்  கோர்ட் அரசியல் அமைப்பு சட்ட அங்கீகாரம் பெற்ற உயர் பதவி வகிப்பவர்கள் மட்டுமே கார்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக மத்திய  அரசு கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இதை தொடர்ந்து மத்தியில் உயர் பதவியில் இருக்கும் 5 விவிஐபிக்கள், மாநிலத்தில் 4  விவிஐபிக்கள் மட்டும் சிவப்பு விளக்கு பயன்படுத்த அனுமதிக்கலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி மத்தியில் ஜனாதிபதி,  துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும், மாநிலங்களில் கவர்னர், முதல்வர், சட்டசபை சபாநாயகர் மற்றும்  ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகியோர் மட்டுமே சிவப்பு விளக்கை பயன்படுத்த முடியும்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி, மூத்த அமைச்சர்களான உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதி  அமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக சட்ட ஆலோசனைகள், இதர  அமைச்சகங்கள் தெரிவித்த கருத்துக்களையும் கடிதத்தில் இணைத்துள்ளார். மூத்த அமைச்சர்களின் கருத்தை கேட்டறிந்த பின்னர் இது தொடர்பான கோரிக்கை மத்திய  அமைச்சரவை முன்பு வைக்கப்படும். நிதின்கட்கரியின் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர் கார்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்துவது  தீவிரமாக கட்டுப்படுத்தப்படும். இதை மீறுபவர்களுக்கு கடுமையான - See more at: tamilmurasu.org/I

கருத்துகள் இல்லை: