ஞாயிறு, 15 மார்ச், 2015

அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிக்கினார்! அடிமைகள் கூடாரத்தில் பதவிகள் விற்பனை அமோகம்

திருநெல்வேலியில் வேளாண்மைத்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில், வேளாண்மைத்துறை செயற்பொறியாளராக பணியாற்றியவர் முத்துகுமாரசாமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம், அப்போதைய அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், அவரது உதவியாளர்களும்தான் என்று பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். இதன்பின்னர், தமிழக டி.ஜி.பி. உத்தரவின் அடிப்படையில், முத்துகுமாரசாமி தற்கொலை செய்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அன்பு, திருநெல்வேலிக்கு நேரடியாக சென்று தற்கொலை செய்துகொண்ட முத்துகுமாரசாமியிடம் டிரைவராக வேலை செய்தவர் உட்பட வேளாண்மைத்துறை ஊழியர்கள் பலரிடம் விசாரணை நடத்தினார்.


இதன்பின்னர், முத்துகுமாரசாமியின் செல்போனுக்கு யாரெல்லாம் பேசினார்கள் என்ற பெயர் பட்டியலை தயாரித்து, அவர்களில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் உதவியாளராக வேலை செய்த திருவண்ணாமலையை சேர்ந்த பூவையா என்பவரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரிப்பதாக தகவல் வெளியானது. மேலும், திருவண்ணாமலையில் இருந்து பூவையாவை சென்னைக்கு அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்வதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கேட்டபோது, பூவையாவை கைது செய்யவில்லை என்று மறுத்தனர்.

வேளாண்மை அதிகாரி தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சரின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்துவதாக வந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: