புதன், 8 மே, 2013

Flashback: ஏய் இங்க வா ! zee TV யில் அய்யங்கார் ஆத்து அடாவடி பஞ்சாயத்து:

ஜீ டிவியில் வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நல்ல பல
கருத்து பரிமாற்றங்கள் நடை பெற்றுள்ளமை உண்மையே.
குறிப்பாக திருமதி நிர்மலா பெரியசாமி அவர்கள் நடத்தும் பொழுது கொஞ்சம் கண்ணியமாக உண்மையிலேயே  கொஞ்சம் சமுகம் பற்றிய நல்ல புரிதலுடன் காணப்பட்டது .
தற்போது பாலக்காட்டு பிராமணர் வகுப்பை சேர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் என்ற பெண்மணி இந்த நிகழ்ச்சியை நடாத்தி வருகிறார் ,
இவரது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து நான் அதிர்ந்து விட்டேன், அது முதல் நாள் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகும் . அதில் பேசிய சமாச்சாரங்கள் பற்றி எல்லாம் நேற்றே ஓரளவு குறிப்பிட்டிருந்தேன் , அதுவல்ல நான் இப்போ சொல்ல போகும் விடயம்<அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை இவர் நடத்தும் முறை இருக்கிறதே , இதுவரை எந்த தொலைகாட்சியிலும் காண முடியாத அளவு படு மோசமான அடக்கு முறை வன்முறை அதாவது Verbal Abuse Psychological Threatening  very brutal treatment அந்த பெண்ணோ பயந்தது பயந்து எப்படியாவது தப்பி ஓடினால் போதும் என்ற எண்ணத்தில் இருப்பது இவருக்கு பார்க்க வேடிக்கையாக இருக்கிறதுஅங்காடி தெருவில் வரும் அய்யங்கார்  வீட்டு எஜமானி சமுகத்தின் அடித்தட்டை சேர்ந்த ஒரு வீட்டு வேலைக்காரியை treat பண்ணிய விதத்தை பார்க்கு எவருக்கும் ரத்தம் கொதிக்கும்,  அதே போல அல்ல அல்ல அதைவிட படு வக்கிரமாக இந்த பாலக்காட்டு அய்யர் ஆத்து  பெண்அந்த அபலை பெண்ணை ஒரு பிடி பிடித்து தனது வக்கிர ரசனைக்கு தீனி போட்டுள்ளார் ,அந்த பெண்ண போக முயற்சிக்கும்போது ஏய்  இங்க வா என்று  உரத்த தொனியில் உத்தரவிடுவாரே என்ன ஆணவம் என்ன ஜாதி திமிர், ஆமாம் இந்த தொனியில் ஜாதி திமிர் தெரிகிறது
அதில் இவருக்கு ஒரு பெரிய லாபம் இருக்கிறது , ஒன்றுக்கும் உதவாத ஒரு ஓடு காலி குடிகாரனுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் தான் ஒரு பரோபகாரி என்று project பண்ண முயற்சிகிறார் ,
அதை விட இவர் கூறும் இந்த விதமான கல்லானாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் தியரி பார்ப்பனர்கள் சமுகத்தின் அடிமைத்தனத்தை தக்க வைக்க நன்றாகவே பயன்படும் .
எத்தனை பெரியார்கள் வந்தாலும் இவாளும் அவாளும் கூட இருந்தே குழி பறித்தே தீருவார்கள்

கருத்துகள் இல்லை: