வெள்ளி, 10 மே, 2013

ராமதாஸ் நாளை விடுதலலையாகிறார் ! பேரம் படிந்தது?

5 வழக்குகளிலும் ஜாமீன்: நாளை விடுதலை ஆகிறார் ராமதாஸ்?மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில் இன்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.இதற்கான கோர்ட்டு உத்தரவு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் திருச்சி மத்திய சிறையில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மகன் அன்புமணி நேற்று மாலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் நாளை விடுதலை ஆவார் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: