வெள்ளி, 10 மே, 2013

தாய் சேய் நலத்தில் அதிர்ச்சி புள்ளி விபரம் ! இந்தியா, 142வது இடத்தில்

பீஜிங்: உலகிலேயே, மிகச்சிறந்த, தாய்-சேய் நலனில், பின்லாந்து நாடு
ஐந்து விதமான பட்டியல்
கர்ப்ப காலத்தில், பெண்களின் உடல்நிலை, குழந்தை பிறப்பு, கல்வி, வேலை மற்றும் வருவாய், அரசியல் சூழ்நிலை ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், காங்கோவில், கர்ப்ப காலத்தில், 30 பேரில் ஒருவர் வீதம் சராசரியாக இறந்து விடுகிறார்கள். அதுவே, பின்லாந்தில், 12,200 பேரில் ஒருவர் மட்டுமே இறக்கிறார்.கல்வியைப் பொறுத்தவரை, காங்கோவில், 8 ஆண்டுகள் மட்டுமே பள்ளிகளுக்கு பெண்கள் அனுப்பப்படுகின்றனர். பின்லாந்தில், 17 ஆண்டுகால கல்வியை பெண்கள் பெறுகின்றனர். பின்லாந்து பார்லிமென்டில், பெண்களின் பங்கு, 43 சதவீதமாக உள்ளது. காங்கோவில், 8 சதவீதமாக இது, இருக்கிறது.
இந்தியா

இருப்பினும், இந்த ஐந்து வகையான பட்டியலில், எல்லாவற்றிலும் பின்லாந்து முன்னணியில் இல்லை. இருப்பினும், தாய்-சேய் நலனில், 12வது இடத்தில், இந்த நாடு உள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா, 30வது இடத்திலும், பாகிஸ்தான், 139வது இடத்திலும், சீனா, 68வது இடத்திலும் உள்ளது. இதில், இந்தியா, 142வது இடத்தில் உள்ளது.
தாய், குழந்தைகளின் கல்வி, பொருளாதார நிலை மற்றும் அரசியல் நிலையில், முதல் பத்து இடங்களில், பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளே முன்னணியில் உள்ளன. இந்தப்பட்டியலில், ஆஸ்திரேலியாவும் இடம் பெற்றுள்ளது. ஆப்ரிக்க நாடுகளான, நைஜீரியா, 169, ஜாம்பியா, 170, மத்திய ஆப்ரிக்க குடியரசு, 171, நைஜர், 172, மாலி, 173, சோமாலியா, 175, காங்கோ, 176வது இடங்களில் உள்ளன.இந்த நாடுகளில், தாய்-சேய் ஆகியோரின் நலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கர்ப்ப காலத்தில், முப்பது பேரில், ஒருவர் வீதம் சராசரியாக இறந்து விடுகின்றனர். அதுபோல், 7ல் ஒரு குழந்தை, தன் ஐந்தாவது பிறந்த நாளுக்கு முன்னதாகவே இறந்து விடுகிறது.இவ்வாறு, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது dinamalar ,com

முன்னணியில் உள்ளது. இதில், இந்தியா, 142வது இடத்தில் உள்ளது.உலக, தாய்-சேய் நலம் குறித்த ஆண்டறிக்கையை, "குழந்தைகளை காப்போம்' என்ற சர்வதேச, அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில், உலகத்தில், 176 நாடுகளில், தாய்-சேய் நலன் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், பின்லாந்து நாட்டை சேர்ந்த பெண்களே, சிறந்த தாய்களாக, முதலிடத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து, ஸ்வீடன், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில், கடைசியாக, அதாவது, மிகவும் மோசமான நிலையில், காங்கோ நாட்டின் பெண்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: