புதன், 8 மே, 2013

கர்நாடக புதிய முதலவர் யார்?சித்தராமையா, கிருஷ்ணா, பரமேஸ்வரா,வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகிய 5 பேர் போட்டி

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெ ற்றியை
பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. அடுத்து கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரி யார்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, சீனியர் தலைவர் சித்தராமையா, மத்திய மந்திரிகள் வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகிய 4 பேர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநில காங்கிரஸ் தலைவ ரான பரமேஸ்வரா தேர்தலில் தோல்வி அடைந்த தால் முதல்-மந்திரி பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. வீரப்பமொய்லியும், மல்லிகார்ஜூன கார்கே ஆகிய இருவரும் மத்திய மந்திரி சபையில் முக்கிய இலாகாக்களில் உள்ளனர். இதனால் இந்த இருவரும் முதல்-மந்திரி பொறுப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. மூத்த தலைவரான சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டாக எதிர் கட்சி தலைவர் பதவியில் அவர் திறம்பட பணிபுரிந்தார். இதனால் சித்தராமையாதான் கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கிறார்.

கருத்துகள் இல்லை: