ஞாயிறு, 5 மே, 2013

இழந்த ஒட்டு வங்கியை பிடிக்க பேருந்துகளை கொழுத்தும் அரசியல் கட்சி

2011-ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், தி.மு.க. தலைமையில் அமைந்த
கூட்டணியில் இடம் பெற்றிருந்த, பா.ம.க. படுதோல்வி அடைந்தது. சட்டசபை தேர்தலில் வன்னியர், ஆதிதிராவிடர் ஆகிய இரு சமுதாயத்திலிருந்தும், சுமார் 50 சதவீதம் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தன.
அதையடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. வட மாவட்டங்களில் பெருவாரியான வெற்றியை பெற்றது. தனித்துப் போட்டியிட்ட பா.ம.க. 3.5 சதவீதம் வோட்டுகளை தான் பெற முடிந்தது.
இந்தக் கணக்கை பார்த்த அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே பா.ம.க.வின் செல்வாக்கு சரிந்துள்ளதை உறுதி செய்து கொண்டன.
அக்கட்சியுடன் இனிமேல் கூட்டணி அமைக்க தேவையில்லை என, இரு கட்சிகளும் முடிவெடுத்து உள்ளன.
இந்த மெசேஜ் ராமதாஸூக்கு போக அவர், ஏதோ தாம் திராவிடக் கட்சிகளை ஒதுக்குவது போல, அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என அறிவித்தார். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
பா.ம.க. பலவீனமாக உள்ள நேரத்தில், ஒரேயடியாக பா.ம.க.வை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தவும், லோக்சபா தேர்தலில், பா.ம.க.வை தலை தூக்காத அளவுக்கு அக்கட்சியை பலவீனப்படுத்தவும் ஆளும் கட்சி தனது ஆபரேஷனை தொடங்கி விட்டது. அதற்கு வாய்ப்பாக வந்திருக்கின்றன, டாக்டர் ராமதாஸ் கைதும், அதை தொடர்ந்து வட மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களும்

பா.ம.க.வினரின் கைது படலத்தை ஆளுங்கட்சி தொடங்கியுள்ளது. வன்முறை கும்பலை, ‘இரும்பு கரம்’ கொண்டு அடக்குவதன் மூலம், பா.ம.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும். வட மாவட்டங்களில் அ.தி.மு.க.,வுக்கு கூடுதல் செல்வாக்கு கிடைக்கும் என, ஆளுங்கட்சி தரப்பு கருதுகிறது.
ராமதாஸ் கைது செய்யப்பட்டதும் உடனடியாக ஜாமின் கேட்காமல் இருந்திருந்தால், அரசு அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்திருக்கும். ஆனால், ராமதாஸ் விடுதலைக்காக பா.ம.க. சார்பில் உடனடியாக ஜாமின் கேட்கப்பட்டதால், சிறை வாசத்துக்கு ராமதாஸ் பயப்படுகிறார், சிறையில் இருக்க திணறுகிறார் என ஆளுங்கட்சி கருதியது.
எனவே தான் ராமதாஸ் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அன்புமணி மீதும் கைது நடவடிக்கை அதிரடியாக பாய்ந்தது.
இப்போது பா.ம.க. தரப்பில் இருந்து சில தூதுகள் விடப்படுவதாக சொல்கிறார்கள். அவை கார்டன்வரை போய்ச் சேர்வது சந்தேகமே!
viruvirupu.com

கருத்துகள் இல்லை: