ஞாயிறு, 5 மே, 2013

இணங்காத பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திய கொடூரன்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 30 வயதுடைய திருமணமான ஒரு பெண், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளப் போராடினார். ஆத்திரமடைந்த அவன் அந்தப் பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திவிட்டு தப்பினான். அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 500 கி.மீ. தொலைவில் உள்ள ஹனும்கர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை தனது நான்கு வயதுப் பெண் குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தார் ஒரு பெண். அவளது கணவர் அருகில் தோட்ட வேலைக்குச் சென்றிருந்தார்.அந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த ஜிட்டு என்ற ஜிதேந்திர குமார், அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் அந்தப் பெண் கத்திக் கூச்சலிட்டு தப்பிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த ஜிட்டு, அந்தப் பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீயிட்டுக் கொளுத்தி விட்டு ஓடினான்."கூச்சலைக் கேட்டு அங்கே ஓடி வந்த பெண்ணின் கணவர், அவளைக் காப்பாற்ற முயன்றார். அதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் இன்று (சனிக்கிழமை) முற்பகல் 11 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து பெண்  அளித்த புகாரின் பேரில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸார் கூறினர்

கருத்துகள் இல்லை: