
நியூயார்க்: கணைய புற்று நோயை கண்டுபிடிக்க 'டிப்ஸ்டிக் பேப்பர்' என்ற புதிய சோதனை முறையை அமெரிக்க சிறுவன் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளான்.அமெரிக்காவில் மேரிலேண்டு பகுதியை சேர்ந்தவன் ஜேக் ஆண்ட்ரகா (15). இவன் அங்குள்ள உயர்நிலை பள்ளியில் படித்து வருகிறான். சமீபத்தில், இவனது மாமா கணைய புற்று நோய் பாதித்து மரணம் அடைந்து விட்டாராம். கணைய புற்று நோயால் தனது மாமா இறந்ததை எண்ணி வருத்தப்பட்ட ஜேக் இந்த நோயின் ஆரம்ப நிலை அறிவது குறித்து ஆய்வு மேற்கொண்டான்.ஆய்வில் பல்வேறு சோதனைகளை தாண்டி தற்போது வெற்றிக் கனியோடு 40 இலட்சம் பரிசும் பெற்றுள்ளான் சிறுவன் ஜேக்.கணைய புற்றுநோய்னா...தொடக்கத்தில், கணைய புற்று நோய் அறிகுறி தெரிவதில்லை. அது ஓரளவு முற்றிய பிறகுதான் நோயின் தாக்கம் குறித்து தெரிய வரும். அதனால், இந்த நோய் தாக்கி உயிர் பிழைப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தற்போது இந்நோயினால் அமெரிக்காவில் 8 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 45 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.'ஜேக்'கின் ஆய்வு...சிறுநீரகம் அல்லது ரத்தத்தில் கணைய புற்று நோயை உருவாக்கும் 'மீசோதெலின்' என்ற புரோட்டீன் அளவை 'டிப்ஸ்டிக் பேப்பர்' சோதனை மூலம் கண்டு பிடிக்க முடியும் என அறிந்தான்.
இது பெண்களின் கர்ப்பம் பற்றி அறிந்து கொள்ளும் சோதனை போன்றது. நிராகரிப்பு...தனது கருத்தை 200 பேராசிரியர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்தான். தனது ஆய்வக பரிசோதனைக்கு உதவும்படி கேட்டு கொண்டான். ஆனால் 199 பேர் அவனது கருத்தை ஏற்கவில்லை.சோதனையில் சாதனை...அனிர்பன் மைத்ரா என்ற பால்டிமோர் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் மட்டும் ஏற்றுக் கொண்டார். பல நிபுணர்களுடன் ஜேக் சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர்களுடன் நடத்திய விவாதத்தில் திருப்தி ஏற்பட்டவுடன் 'டிப்ஸ்டிக் பேப்பர்' சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.வெற்றி... வெற்றி...ஜேக் சிறப்பாக பரிசோதனை செய்து காட்டி வெற்றி பெற்றதையடுத்து, இந்த முறையில் கணைய புற்று நோயை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து அதை குணப்படுத்த முடியும் என்பது நிரூபணமானது.சீப் அண்ட் பெஸ்ட்...இது முந்தைய பரிசோதனையை விட 168 மடங்கு அதிவேகமானது. மலிவானதும் கூட. எனவே, கணைய புற்று நோயை கண்டறிய இச்சோதனையை மேற்கொள்ளலாம் என எல்லார்தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.பரிசும், அங்கீகாரமும்..இந்த கண்டுபிடிப்பிற்காக சிறுவன் ஜேக் ரூ.40 லட்சம் பரிசு பெற்றுள்ளான். லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி ஆப் மெடிசன் அமைப்பில் இவன் உரையாற்றினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக