ஞாயிறு, 16 மே, 2010

அமெரிக்கப் படையினருக்கு விரைவில் பயிற்சி வழங்கப்படும் என இலங்கை இராணுவம்

அமெரிக்கப் படையினருக்கு விரைவில் பயிற்சி வழங்கப்படும் என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்காவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அந்நாட்டு இராணுவத்தினருக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக இராணுவப் படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் பல நாடுகள் பயிற்சிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கும் வகையிலான விசேட பயிற்சி நெறியொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் கெரில்லா யுத்தம்இ பொதுமக்கள் மீட்புஇ வனாந்திர யுத்தம் போன்றவை தொடர்பில் பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் குறுகிய காலத்தில் பாரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தமையினால் இந்தத் தந்திரோபாயங்களை வேறும் நாடுகள் கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை: