வெள்ளி, 21 மே, 2010

யாழ் ஒரு வாரத்துக்கான திரைப்பட விழாவொன்றை விரைவில் நடத்தயாழ் மக்களின் மனநிலையில்; ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அங்கு ஒரு வாரத்துக்கான திரைப்பட விழாவொன்றை விரைவில் நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ் கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் மஹிந்த ஹத்துசிங்கவின் பணிப்பின்பேரில் இதற்கான நடவடிக்கைகளை யாழ் பாதுகாப்புத் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றது. இத்திரைப்பட விழாவில் தென்னிந்திய பழைய தமிழ் திரைப்படங்களும் வெற்றிப் படங்களும் காண்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் முன்னர் 16 திரையரங்குகள் இருந்தபோதும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அவையாவும் அழிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக திரையரங்குகளில் ஒன்றுகூடி படம் பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை இழந்தனர்.

கருத்துகள் இல்லை: