சனி, 22 மே, 2010

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து நிவாரண உதவி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து நிவாரண உதவி கிடைக்கப்பெற்றுள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்பின்பேரில் இந்நிவாரண உதவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையூடாக இவ்வுதவி அனுப்பப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். திருமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் ஆறு லொறிகளில் கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நீர்த்தாங்கிகள், தண்ணீர் போத்தல்கள், மற்றும் உலருணவுப் பொருட்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து மேலும் இரு லொறிகளில் நாளை நிவாரணப்பொருட்கள் கம்பஹாவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்மக்களே இந்த நிவாரண உதவிகளை வழங்கியுள்ளதாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: