திங்கள், 17 மே, 2010

படையினர் குவிப்பு - யாழ்.கட்டளைத் தளபதி தெரிவிப்பு தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளும் காதலர்களின் சட்டவிரோத திருமண முயற்சிகள

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக படை யினரை அதிகரித்துப் பாதுகாப்புச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். யாழ்.குடாநாட்டில் கடந்த வாரம் படையி னரின் தொகை அதிகரிப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்.குடாநாட்டில் பொதுமக்களை அச்சு றுத்தும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலத்தில் யாழ்.மாவட்டத்தில் நடந்த கடத்தல் முயற் சிகளில் பல தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளும் காதலர்களின் சட்டவிரோத திருமண முயற்சிகளுமேயாகும். எனினும் இவற்றை யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர்ப் பத்திரிகைகள் சில கடத்தல் சம்பவங்கள் என்றே செய்திகளைப் பிரசுரிப்பதனால் மக்கள் அச்சமடைகின்றனர். எனினும் குடா நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கப் படையினர் பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்குகின்றனர் என யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க மேலும் தெரிவித்தார்.
____________________________________________________________________________________________

கருத்துகள் இல்லை: