வியாழன், 20 மே, 2010

நாளை 7 படங்கள் திரைக்கு வருகின்றனவாமகோடை விடுமுறை காலத்தில் இதுவரை வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்கிறார் போல இல்லாத நிலையில் நாளை 7 படங்கள் திரைக்கு வருகின்றனவாம்.

இதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது கரண் நடித்துள்ள கனகவேல் காக்க படம் [^]. சென்சார் அதிகாரிகள் இந்தப் படத்தைப் பார்த்து முடித்தபோது கை தட்டி வரவேற்றார்களாம். அங்காடித் தெரு படத்துக்குப் பின்னர் எங்களை பாதித்த படம் இது என்றும் பாராட்டியுள்ளனர்.

இப்படத்தை கவின்பாலா இயக்கியுள்ளார். கரணே கூட இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

இதுதவிர அருண் விஜய் [^] நடித்துள்ள மாஞ்சா வேலு, ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் இணைந்து நடித்துள்ள குற்றப் பிரிவு, டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மகனே என் மருமகனே, குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், கார்த்திக்குமார், ஜெயராம் நடித்து மதுமிதா இயக்கியுள்ள கொல கொலயாமுந்திரிக்கா ஆகிய படங்களும் நாளை ரிலீஸாகின்றன.

இதுதவிர ஆங்கிலத்தில் உருவாகி தமிழில் டப் ஆகியுள்ள ஐயன்மேன் 2 படமும் நாளையே திரைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: