திங்கள், 17 மே, 2010

கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் சுமார் 100 சீசீரீவ

கொழும்பு நகரில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் சுமார் 100 சீசீரீவி கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தலைநகரில் இடம்பெறக் கூடிய செயல்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதி மீறல் சம்பவங்கள் குறித்து கமராக்களின் மூலம் கண்காணிக்கப்படவுள்ளன.சீசீரீவி கமரா கண்காணிப்பு தொழில்நுட்பம் தொடர்பில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதிக் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.எஸ்.பி. பெர்னாண்டோ உள்ளிட்ட ஐந்து உத்தியோகத்தர்கள் சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளனர். ஒரு வார காலம் இவர்கள் இந்தப் பயிற்சி நெறியில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது."மஹிந்த சிந்தனையின் மூலம் பாதுகாப்பான நகரம்" என்ற தொனிப் பொருளில் அடுத்த மாதமளவில் சீசீரீவி கமராக்கள் பொருத்தப்படவுள்ளன. போக்குவரத்து சிக்கல்களை கட்டுப்படுத்தவும்இ குற்றச் செயல்களை மட்டுப்படுத்தவும் அநேக நாடுகளில் இந்த சீசீரீவி கமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளில் அதிகளவு இவ்வாறான கமராக்களை காணக்கூடியதாக உள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரில் பொருத்தப்படவுள்ள பாதுகாப்பு கமெராக் கட்டமைப்பை இயக்குவது தொடர்பாக ஒருவாரகால பயிற்சிகளைப் பெறுவதற்காக அந்தத் திட்டக் குழுவின் தலைவர் சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.எஸ்.பீ. பெர்னாண்டோ உள்ளிட்ட அதிகாரிகள் ஆறுபேர் நேற்று சிங்கப்பூர் பயணமாகினர். குற்றவாளிகளைக் கண்டறிவதை இலகுவாக்கும் நோக்கிலும்இ வாகனப் போக்குவரத்து நெருக்கடியைத் தடுப்பதற்கான உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும் 100 பாதுகாப்பு கெமராக்கல் கொழும்பு நகரில் பொருத்தப்படவுள்ளன. இந்தத் திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா செலவாகும் என சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: