ஞாயிறு, 16 மே, 2010

குஷ்புவை ஜாக்பாட நிகழ்ச்சியிலிருந்து தூக்கி விட்டனராம். ஜெயா டிவி நிர்வாகம

சென்னை: திடீரென திமுகவில் சேர்ந்து விட்டதால், குஷ்பு நடத்தி வந்த ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து அவரை தூக்கி விட்டதாம் ஜெயா டிவி.

கடந்த 2001ம் ஆண்டு முதல் ஜாக்பாட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதை குஷ்புதான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் குஷ்பு.

இதனால் ஜெயா டிவி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது குஷ்புவை அந்த நிகழ்ச்சியிலிருந்து தூக்கி விட்டனராம்.

இதுகுறித்து ஜாக்பாட் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுத் தரப்பில் கூறுகையில், தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் குஷ்பு திமுகவில் இணைந்த போது தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.

திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.

ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக்கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கியுள்ளோம்.

அவர் பங்கேற்ற 15 எபிசோடு ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக இருக்கிறது. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஜெயா டிவியிலிருந்து என்னை நீக்கியது குறித்து இதுவரை எனக்குத் தகவல் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை [^] குஷ்பு.

அதிமுக அனுதாபியாக பார்க்கப்பட்டாலும் குஷ்பு சமீப காலம் வரை எந்த அரசியல் [^] கட்சியுடனும் ஒட்டாமல்தான் இருந்து வந்தார்.

ஆனால் அவர் மீதான கற்பு குறித்த பேச்சு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் [^]தள்ளுபடி செய்தவுடன் அவருக்கு திடீரென அரசியல் மீது பாசம் அதிகரித்தது. காங்கிரஸில் அவர் சேரப் போவதாக பேச்ச்சுக்கள் எழுந்தன.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தடலாடியாக திமுகவில் இணைந்து விட்டார் குஷ்பு. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏன் திடீரென திமுகவுக்குத் தாவினார் என்ற அனைவரின் கேள்விக்கும் இதுவரை தெளிவான பதில் இல்லை.

இந்த நிலையில், ஜெயா டிவியில் நடத்தி வந்த ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து குஷ்புவை அந்த டிவி தூக்கி விட்டது.

இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார் குஷ்பு. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, யார் சொன்னது என்று ஆவேசமாக கேட்டார் குஷ்பு. பின்னர் அவர் கூறுகையில், அரசியலையும் தொழிலையும் ஒன்றாக பார்க்கிறார்கள். நான் அப்படி ஒன்றாக பார்பதில்லை. அதனால்தான் இவர்களிடம் சொல்லிவிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை;திமுகவில் இணைந்தேன்.

என்னை ஜாக்பாட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். நீக்கம் செய்யும் போது என்னிடம் தான் முதலில் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.

முதலில் என்னிடம் தகவல் தெரிவிக்கட்டும். அப்புறம் ஆலோசித்து முடிவெடுக்கிறேன் என்றார்.



கருத்துகள் இல்லை: