திங்கள், 17 மே, 2010

எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன் கால​மா​னார்

சென்னை,​​ மே 16:​ பிர​பல எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன் ​(62) சென்​னை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை கால​மா​னார்.​ உடல்​ந​லக் குறைவு கார​ண​மாக அவர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வந்​தார்.​ சென்னை திரு​வான்​மி​யூ​ரில் வசித்து வந்த அனு​ராதா ரம​ணன்,​​ ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட சிறு​க​தை​க​ளை​யும்,​​ 850 நாவல்​க​ளை​யும் எழு​தி​யுள்​ளார்.​ சிறை,​​ ஒரு வீடு இரு வாசல்,​​ கூட்​டுப் புழுக்​கள் ஆகிய இவ​ரு​டைய நாவல்​கள் திரைப்​ப​டங்​க​ளாக எடுக்​கப்​பட்​டுள்​ளன.​ எழுத்​துத் துறை​யில் சிறந்து விளங்​கி​ய​தற்​காக முன்​னாள் முதல்​வர் எம்.ஜி.ஆரி​ட​மி​ருந்து தங்​கப் பதக்​கம் மற்​றும் சிறந்த எழுத்​தா​ள​ருக்​கான ராஜீவ் காந்தி விருது என பல்​வேறு விரு​து​களை இவர் பெற்​றுள்​ளார்.​ கடந்த சில நாள்​க​ளாக உடல் நிலை சரி​யில்​லா​மல் இருந்த இவர்,​​ அடை​யா​றில் உள்ள தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​டி​ருந்​தார்.​ ஞாயிற்​றுக்​கி​ழமை மாலை மார​டைப்பு ஏற்​பட்டு அவர் உயி​ரி​ழந்​தார்.​ அவ​ரு​டைய உடல் திரு​வான்​மி​யூர் வால்​மீகி நக​ரில் அவ​ரது இல்​லத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளது.​ திங்​கள்​கி​ழமை மாலை 4 மணிக்கு பெசன்ட் நக​ரில் உள்ள எரி​வாயு தகன மயா​னத்​தில்,​​ அவ​ரு​டைய உடல் தன​கம் செய்​யப்​பட உள்​ளது.​ மறைந்த அனு​ராதா ரம​ண​னுக்கு இரண்டு மகள்​கள் உள்​ள​னர்.
In a sensational disclosure of 2004, noted Tamil writer Anuradha Ramanan has alleged that Hindu pontiff, Kanchi Shankaracharya Jayendra Saraswati attempted to sexually abuse her in 1992. He was arrested with his junior, Vijayendra Saraswati in their alleged involvement in Shankara Raman murder case. The matter is still pending before the court. As many as 24 people are accused in the case which pertains to the murder of the manager of Varadaraja Perumal temple in Kanchipuram.

கருத்துகள் இல்லை: