வெள்ளி, 21 மே, 2010

தமிழகத்தில் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு அதிகரித்திருப்பதால் மின் தடை நேர

தமிழகத்தில் தற்போது காற்றாலை மூலம் மின்உற்பத்தி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அக்னி வெயில் இன்னும் நான்கு நாளில் முடியப் போகிற நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல காற்று வீசதுவங்கியுள்ளது.

காற்று அதிகமாக வீச துவங்கியிருப்பதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவும் நேற்று காற்றாலை மூலம் 1,800 மெகாவாட் மின் உற்பத்தி ஆனது. இதே நிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக மி்ன்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் மின்தடை நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒரு மணி நேரம்தான் நேற்று மின்தடை இருந்ததாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதே நிலை தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை: