செவ்வாய், 18 மே, 2010

இந்தியத் தலைவர்களைப் பழிவாங்க தமிழகத்தில் மீள அணிசேர்கிறார்கள் விடுதலைப் புலிகள்:

விடுதலைப்புலிகள் அமைப்பானது புதுடில்லிக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருப்பதும் கடந்த வருடம் அந்த அமைப்பு அழிக்கப்பட்டதற்கு இந்தியத் தலைவர்களை குற்றஞ்சாட்டுவதும் புலிகள் மீதான தடையை இந்தியா நீடித்திருப்பதற்குக் காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்தியாவின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு அந்த அமைப்பு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றதென்று தடையை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இலங்கை இராணுவத்தால் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் தமிழ்நாட்டில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மீள அணி சேர்ந்து வருகின்றனர். அந்த அமைப்பின் தப்பியிருக்கும் உறுப்பினர்கள் இந்திய அரசாங்கத்தை துரோகிகளாகப் பார்க்கின்றனர்.

இலங்கை அரசாங்கத்தை பகைவர்களாகப் பார்க்கின்றனர். பழிவாங்குவதற்கு விரும்புகின்றனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையை புலிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் எதிர்த்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா 1992 இல் புலிகள் அமைப்பை தடை செய்திருந்தது. பின்னர் இரு ஆண்டுகளுக்கொரு முறை தடையை நீடித்து வருகிறது.
 

கருத்துகள் இல்லை: