வெள்ளி, 21 மே, 2010

யாழ். மாநகரசபைக்கு நடமாடும் கழிப்பறை

தனியார் வர்த்தக நிறுவனமான எக்ஸ்போ லங்காவினால் யாழ். மாநகரசபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடமாடும் கழிப்பறைத் தொகுதியினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் (21) பார்வையிட்டார்.
 
அவசிய தேவைகளின்போது பொது இடங்களில் மிக அத்தியாவசியமாகத் தேவைப்படும் நடமாடும் கழிப்பறைத் தொகுதியானது யாழ். மாநகர முதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களின் தொடர் முயற்சிகளையும் வேண்டுகோளையும் அடுத்து மேற்படி வர்த்தக நிறுவனத்தினால் யாழ். மாநகர சபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த யாழ். மாநகர முதல்வர் அவர்கள் மிகப்பெறுமதி வாய்ந்த இந்நடமாடும் கழிப்பறைத் தொகுதியினை அன்பளிப்புச் செய்த எக்ஸ்போ லங்கா நிறுவனத்தினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டதுடன் எதிர்வரும் நல்லூர் பெருந்திருவிழா உட்பட முக்கியமான நிகழ்வுகள் மற்றும் வைபவங்களின்போது இந்நடமாடும் கழிப்பறைத்தொகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஈடுபடுத்தப்படும் எனத்தெரிவித்தார்.
 
ஆண்களுக்கும் பெண்களுக்குமென தனித்தனியாக தலா நான்கு கழிப்பறைகள் என்ற வகையில் மொத்தம் எட்டுகழிப்பறைத் தொகுதிகளைக் கொண்ட இந்நடமாடும் தொகுதியானது வௌவேறான இரு குளியலறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்

கருத்துகள் இல்லை: