வியாழன், 20 மே, 2010

ஹிட்லரின் மறைவின் பின்னர் நாசி கட்சிக்கு நேர்ந்த நிலையே புலிகளுக்கு

பிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபாயங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழத்தின் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். பிரபாரன் மிகச் சிறந்த யுத்த தந்திரோபயங்களைப் பயன்படுத்திய சிறந்த இராணுவத் தலைவராக உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்கள் கருதிய போதிலும்இ உண்மை நிலைமை முற்றிலும் மாறுப்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதியில் பிரபாகரனின் யுத்த தந்திரோபாயங்கள் மாபெரும் தோல்வியை தழுவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கெரில்லா போராட்ட முறைமையிலிருந்துஇ மரபு ரீதியான ஆயுத போராட்டக் குழுவாக மாற்றமடைந்தமை பிரபாகரன் இழைத்த மாபெரும் தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள் கெரில்லா தாக்குதல் முறைமையை பின்பற்றியிருந்தால் இலங்கைப் படையினரால் ஒருபோதும் யுத்த ரீதியாக தோற்கடித்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் மரபு ரீதியான படையைப் போன்றே புலிகளின் படை பலத்தையும் அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ள்ளப்பட்ட பலவந்த ஆட்சேர்ப்பு புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வித பயிற்சியுமன்ற பொதுமக்களை யுத்த களத்தில் ஈடுபடுத்தியதாகவும்இ இதனால் தோல்விகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 60 வீதமான உறுப்பினர்கள் பலவந்தமான முறையில் புலிகளினால் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுத பலம் காணப்பட்ட அளவிற்கு இறுதி நேரத்தில் புலிகளிடம் ஆள் பலம் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ படை தொடர்பில் பிரபாகரன் குறைவாக கணித்து வைத்திருந்தமைஇ அரச படையினர் வெற்றியீட்ட வழிகோலியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளின் தத்துவாசிரியரான அன்ரன் பாலசிங்கத்தின் மறைவின் பின்னர்இ யதார்த்தபூர்வமான ஆலோசனைகளை பிரபாகரனுக்கு எவரும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்தியா அல்லது மேற்குலக நாடுகள் தலையீடு செய்யும் என பிரபாகரன் இறுதித் தருணம் வரையில் நம்பியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஹிட்லரின் மறைவின் பின்னர் நாசி கட்சிக்கு நேர்ந்த நிலையே புலிகளுக்கு நேர்ந்துள்ளதாக பேராசிரியர் குணரட்ன தெரிவித்துள்ளார்.

0 Kommentare:

கருத்துகள் இல்லை: