சனி, 4 செப்டம்பர், 2010

தொடர்ந்து தங்கச்சியா?-லேகா அலுப்பு

தொடர்ந்து தங்கச்சி வேடமாக வந்ததால்தான் நிறையப் படங்களை நான் ஒத்துக் கொள்ளவில்லை. தங்கச்சி வேடத்திலும் நடிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை என்று அலுப்புடன் கூறியுள்ளார் லேகா வாஷிங்டன்

டிவி காம்பியராக இருந்து வந்த லேகா வாஷிங்டன் எதிர்பாராத விதமாக சினிமாவுக்கு வந்தவர். முன்பு சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை, அவரை தூக்கி விட்டு சனாவைப் போட்டார்கள்.

பின்னர் ஜெயங்கொண்டான் படத்தில் ஹீரோவுக்கு தங்கச்சியாக நடித்தார். அதுதான் தப்பாக போய் விட்டதாம். தொடர்ந்து தங்கச்சி வேடமாகவே அவரைத் தேடி நிறைய வந்ததாம். கடுப்பாகிப் போன லேகா, படமே வேணாம் என்று கூறி விட்டார்.

இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்குப் பதில் வேறு பீல்டை பார்க்கலாம் என்று நினைத்து இந்திக்குப் போய் விட்டார். அங்கு கவர்ச்சிகரமான ஒரு ரோலில் ஒரு படத்தில் நடித்து இந்தியில் கவர்ச்சிப் புயலை கிளப்பினார்.

தற்போது வ குவார்ட்டர் கட்டிங் என்ற படத்தில் நடித்துள்ளார் லேகா. தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், ஒரு படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தால் தொடர்ந்தே அதே பாணியில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள். இதனாலேயே தங்கை வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை நிராகரித்து வந்தேன்.

ஜெயங்கொண்டான் படத்தில் நடிக்க வாய்ப்புள்ள வேடம் என்பதால்தான் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் தங்கை வேடத்தில் இனி நடிக்க மாட்டேன் என்றார்.

கருத்துகள் இல்லை: