வெள்ளி, 3 செப்டம்பர், 2010

3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பனைமரம் ஏறும் பயிற்சி: கலைஞர் அறிவிப்பு

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக உதவியோடு 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நவீன சாதனங்களுடன் பனைமரம் ஏறும் தொழிலில் பயிற்சி அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பனைமரம் ஏறி பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து வருவதால், இத்தொழில் வளர்ச்சியைக் கருதியும், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடைய குடும்பங்களின் நலன் கருதியும் பனைமரங்கள் மிகுந்துள்ள பகுதிகளில் கோவையிலுள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் உதவியோடு நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பான முறையிலும் பனைமரம் ஏறி தொழில் செய்திட 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இலவசமாகப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி இன்று (3.9.2010) அறிவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: