சனி, 4 செப்டம்பர், 2010

வீடமைப்புக்கு 2 இலட்சத்து 50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது

யுத்தம், வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு வீடமைப்பு, சுயதொழிலில் நிவாரணக் கடன்
  • 15ம் திகதி முதல் அமுல்; இலங்கை வங்கியில் 4 வீத வட்டி
  • 10 வருடங்களில் திரும்பிச் செலுத்த வேண்டும்
  • ஒரு வருட கடன் நிவாரணம்
  • வீடமைப்புக்கு 2 இலட்சத்து 50,000 கடன்
வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த நிலைமை காரணமாகவும் பயங்கரவாத வன்செயல்கள் காரணமாகவும் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதை பிரதான நோக்காகக் கொண்டு நான்கு வீத வட்டிக்கு வீடமைப்பு, சுயதொழில் கடன் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளனது.

இலங்கை புனர்வாழ்வு அதிகார சபையும், இலங்கை வங்கியும் இணைந்து இக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன.

10 வருடங்களில் திரும்பிச் செலுத்தும் விதத்தில் 4 வீத ஆகக் குறைந்த வட்டியில் ஒரு வருட கடன் நிவாரண திட்டத்தின் கீழ் வீடமைப்புக்கு 2 இலட்சத்து 50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது. சுயதொழில் முயற்சிகளுக்கென இதே வட்டி வீதத்தில் ஒரு வருட கடன் நிவாரணத்தில் மூன்று வருடத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் 2 இலட்சத்து 50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கடன் வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி தமது கிளை அலுவலகங்கள் ஊடாக ஆரம்பிக்கிறது.

குறிப்பாக யுத்தத்தினால் அழிவுற்ற வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் வவுனியாவில் இலங்கை வங்கி தனியான அலுவலக மொன்றை திறக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த அலுவலகம் திறக்கப்பட வுள்ளதுடன் புனர்வாழ்வு அதிகார சபையின் அலுவலர்களும் இங்கு கடமையாற்றவுள்ளனர்.

கடன் பெற தகுதியுடையவர் பிரதேச செயலகத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று தேவையான தகவல்களை நிரப் பிய பின்னர் கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும். கிராம சேவகர் பிரதேச செயலாளரின் சான்றுடன் புனர்வாழ்வு அதிகார சபையிடமும் அதன் பின்னர் இலங்கை வங்கியிடமும் படிவம் இறுதி முடிவுக்காக அனுப்பப்படும்.

யுத்த நிலைமைகள் காரணமாக பாதிப் படைந்த பெற்ற கடனை மீளச் செலுத்த முடியுமான குடும்பங்களுக்காக வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்த குடும்பங்கள் மற்றும் யுத்த நிலைமைகள் காரணமாக குடும்பத்தின் வருமானம் உழைப்பவர் இறந்து, காணாமல் போன வரின், ஊனமுற்ற நிலைமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட குடும்பங்கள் அல்லது விதவையாக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில் ஆரம்பிப்பதற்கும் கடன் வழங்கப்படவுள்ளது.

விவசாய கைத்தொழில், மின்பிடி தொழில், கால்நடை வளர்த்தல், வீட்டுடன் தொடர்புடைய பொருட்கள் சம்பந்தமான சுயதொழில், சிறிய அளவிலான வியாபார நடவடிக்கை மற்றும் வேறு சுயதொழில் முயற்சிகளுக்கும் இந்த நிவாரணக் கடன் வழங்கப்படும்.

தகுதி பெற்ற கடன் விண்ணப்பதாரர்களை தெரிவு செய்யும் முறை பிரதேச செய லாளர்களின் நடுநிலைமையுடன் புனர்வாழ்வு அதிகார சபை முலம் நடைமுறைப்படுத் தப்படும்.

எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதோடு அது தொடர்பாக சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர் மற்றும் இலங்கை வங்கி கிளை முகாமையாளர்களை அறி வுறுத்துவதற்கான உரிய சுற்றறிக்கை அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

புனர்வாழ்வு அதிகார சபை மற்றும் இலங்கை வங்கியின் அதிகாரிகள் அடுத்த வாரம் வட பகுதியில் கிராமப்புறங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கிராமப்புற மக்களுக்கு இக்கடன் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களும் வழங்கப் படவுள்ளன.

கருத்துகள் இல்லை: