புதன், 1 செப்டம்பர், 2010

Archie Indian actress won Emmy இந்திய வம்சவாளி நடிகைக்கு எம்மி விருது!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நடிகையான ஆர்ச்சி பஞ்சாபிக்கு எம்மி விருது கிடைத்துள்ளது.

பென்ட் இட் லைக் பெக்காம், ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆர்ச்சி. தி குட் லைப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான எம்மி விருதினை அவர் பெற்றுள்ளார்.
லண்டனில் 62வது பிரைம்டைம் எம்மி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

1999ம் ஆண்டு ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் படம் மூலம் நடிகையானவர் ஆர்ச்சி. பின்னர் பென்ட் இட் லைக் பெக்காம் படம் மூலம் அவர் சர்வதேச அளவில் பிரபலமானார்.
தி கான்ஸ்டன்ட் கார்டனர், ஏ மைட்டி ஹ்ர்ட், யாஸ்மின் ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
2004ம் ஆண்டு வெளியான யாஸ்மின் படத்தில்சிறப்பாக நடித்ததற்காக 2006ல் ரீம்ஸ் திரைப்பட விழாவில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

அதேபோல, 2005ல் பெர்லினில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஷூட்டிங் ஸ்டார் விருதைப் பெற்றார்.

கருத்துகள் இல்லை: