வியாழன், 2 செப்டம்பர், 2010

உசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசியில் அவருக்கு சமாதி கட்டினதுதான் மிச்சம்

ஜீரிவி என்கிற இத்துப்போன தொலைக்காட்சியில் மண்டைகழண்டதுகளின் நாடகம்
ஜீரிவி என்கிற இத்துப்போன தொலைக்காட்சி ஒன்று ஐரொப்பாவில் இருந்து ஒளிபரப்பாகிறது. கட்டணைத்தொலைக்காட்சி என்றால் எவனுமே பார்க்கமாட்டான் எனத் தெரிஞ்சு ஓசியில் பார்ப்பவர்களுக்காக ஒளிபரப்பாகிறது. புலிவிசுவாசிகள் கூட அதனை பார்ப்பதில்லை. ஐங்கரன், சண் டிவிக்கள் மலிவுவிலையில் கார்டுகளை விற்றதினால் ஜீரிவி கட்டணத்தொலைக்காட்சியாக்கினால் எவன்வாங்குவாhன். என்ன செய்வது மக்களை இன்னும் மாங்காய் மடையர்களாக நினைத்து அதில் சில நிகழ்ச்சிகள் வழங்கப்படும். அதில் மூன்று அல்லது நான்குபேர் நாட்டு நடப்புகளைப் பற்றி நாடகபாணியில் புலம்புவார்கள். பார்க்க கன்றாவியாக இருக்கும்.
அண்மையில் இலங்கைக்குப்போய் வந்த ஒருவர் அங்கு எல்லாம் நல்லாயிருக்கு என சொல்வதை இரண்டுபேர் அவரை வாங்கு வாங்கு என்று வாங்கிக் கொண்ட கன்றாவியைப் பார்த்தேன். இலங்கைக்கு கோடைகால விடுமுறைக்கு சென்று திரும்புவர்கள் அங்கு இப்போ நிலமை நல்லாயிருக்கு என சொல்லி வருகிறார்கள். இது புலம்பெயர் புலிகளுக்கு பொறுக்கவில்லை. இதனை மையமாக வைத்து ஜீரிவியில் தமது ஆற்றாமையை ஆத்திரமாகக் காட்டிக்கொண்டனர். இலங்கைக்குப்போய் வந்தவர் அங்கு நல்லாயிருக்கு என சொல்ல ஏனைய இருவரும் வெகுண்டெழுந்து தமது புலம்பலை வெளிக்காட்டினர். அங்கு போய் கலர்ஸ் காட்டி வந்திட்டு இங்கு நல்லயாயிருக்கு என சொல்றதா. அகதிகளாயிருக்கிற மக்களையோ ஊனப்பட்ட போராளிகளையோ சந்தித்து போட்டோ எடுத்தியா, நல்லூருக்கு போய்விட்டு வந்து இங்கு நல்லாயிருக்கு என ஒருவர் ஹிஸ்ரியா நோயாளிபோல் கத்த கோர்ட் சூட் போட்ட மற்றவர் உணர்ச்சி வசப்படும் அவரைப்பார்த்து உணர்ச்சி வசப்படாத என சாந்தப்படுத்த ஏதொ ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டேனா என்பது போல இருந்தது.
புலம்பெயர்தமிழ்மக்கள் கோடை விடுமுறைக்கு இலங்கைக்கு படையெடுக்கப்போகிறார்கள் என தெரிந்தவுடன் புலிகளின் ஊடகங்கள் பல்வேறு விதமான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார்கள். விமான நிலையத்தில் இருட்டறை, புலனாய்வுப் பிரிவினர் கப்பம் வாங்குகிறார்கள், கடத்துகிறார்கள் என பலவிதமாக சோடித்து கதை விட்டனர். ஆனால் தமிழ்சனங்கள்; இந்தக் கதைகளை கணக்கெடுக்காமல் கட்டார், ஓமான், என இருக்கிற அரபுநாட்டு பிளைட்டுகளில் இடம் எடுக்கேலாமல் போகத் தொடங்கினார்கள். புலம்பெயர் புலிகளால் தமிழ்சனங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. புலிகளுக்காக கொடி பிடித்தவர்கள் எல்லாம் ஆளக்காள் 30கிலோ லக்கேஜ-டன் டிக்கெட் எடுத்து குடும்பத்துடன் நாட்டுக்குப்போய் திரும்பியும் வந்து விட்டார்கள். வந்தவர்கள் எல்லாம் அங்கே நல்லாயிருக்கு என்று சொன்னதால் வெகுண்டெழுந்து ஜீரிவியில் ஒரு அலப்பறை நிகழ்ச்சியில் புலம்பித்தள்ளி விட்டார்கள். இவர்களால் நாட்டுக்குப் போகமுடியாது. புலனாய்வுப்பிரிவு ஏயர்போர்ட்டில் முகத்தைப்பார்த்து அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். மற்றவர்கள் போய் சந்தோஷமாக திரும்பி வருகிறார்கள் என்கிற வயித்தெரிச்சலில் இப்படி ஹிஸ்ரியா வியாதிக்காரர் மாதிரி கத்துவதைத் தவிர வேறு எந்தவித வழியுமில்லை.
இப்படித்தான் புலிகளின் இறுதியுத்தத்தின் போது தலைவர் திட்டம் வைத்திருக்கிறார் என உசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசியில் அவருக்கு சமாதி கட்டினதுதான் மிச்சம். ஆஸ்பத்திரியில்  இருக்கவேண்டியவர்கள் நாடகம் போட்டால் அது எப்படியிருக்கும் என்பதை இரவு ஜீரிவியில் இடம்பெறும் இந்த நாடகங்களைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
மக்கள் இப்போ விழித்துக்கொண்டு விட்டார்கள். இனி இந்த குரங்காட்டி வித்தையெல்லாம் எடுபடாது.  இதை நாடகம் போடுகிறவர்கள் புரிந்து கொண்டால் சரி.

கருத்துகள் இல்லை: