வியாழன், 2 செப்டம்பர், 2010

நக்சல் கடத்திய போலீசார் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றதா

கடத்தப்பட்டு 5 நாட்கள். முதல்வர் வரை எடுத்த முயற்சிக்கு பலன் இல்லை, மாவோயிஸ்ட் நக்சல் கடத்திய போலீசார் உயிருடன் இன்று திரும்புவார்கள் என 4 போலீசார் குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்து காத்திருந்த நிலையில், 4 பேரில் அபய் யாதவ் என்ற போலீஸ்காரரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் போலீஸ்தரப்பில் இது உறுதிசெய்யப்படவில்லை.

நக்சல் விஷ! யத்தில் அரசு பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுவித்தாலும், இதனை ஒரு பொருட்டாகவே நினைக்காத மாவோயிஸ்ட் தங்களது தாக்குதலை குறைத்துக் கொள்ளும் எண்ணம் இது வரை வரவில்லை. மாறாக நாள்தோறும் மலையிடுக்குகளில் பதுங்கி , பாதுகாப்பு படைவீரர்களை சுட்டு கொன்றுதான் இருக்கின்றனர்.

கொத்து, கொத்தாக உயிர்பலிகள் : பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம் என நக்சல் பலமாகவே கால் ஊன்றி விட்டனர். இளம் குருத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவர்கள், ஆலமரமாக மாறி விழுதுகள் விழாத குறைதான் மிச்சம். நக்சல்கள் அழிக்க மத்திய அரசு மூலம் கீரின் ஹன்ட் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்பு அதிகாரிகள் முதல் சி.ஆர்.பி.எப்., படையினர் வரை களத்தில் இருக்கின்றனர். நக்சல்கள் தங்களுடைய பலத்தின் மூலம் கொத்து, கொத்தாக ரயில் பயணிகள் , சி.ஆர்.பி.எப்., படைவீரர்கள் என கொன்று குவித்து வருகின்றனர். ஆனால், அந்த அளவிற்கு நக்சல்கள் கொல்லப்படார்களா என்பது மிக சொற்பம்.

தாக்குதல் நடத்துதல், போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தல் , ரயில்வே ஊழியர்களை கடத்துதல் என இருந்த நக்சல்கள் புதிதாக போலீசாரை கடத்தி அரசை பணிய வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பீகார் போலீசார் கடத்தல் : இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகார் மாநிலம் லக்சாராய் மாவட்டத்தில் வனப்பகுதியில் நக்சல்கள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது மாவோயிஸ்டுகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சண்டையில் 7 போலீசார் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமுற்றனர். இதனை பயன்படுத்தி 4 போலீசாரை நக்சல்கள் கடத்தி சென்று விட்டனர். போலீசாரை விடுவிக்க வேண்டுமானால் சிறையில் அடைபட்டு கிடக்கும் தங்களுடைய சக நக்சல்கள் 8 பேரை விடுவிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. இல்லையேல் போலீசாரை கொல்வோம் என அச்சுறுத்தல் எச்சரிக்கை விட்டுள்ளனர்.

உறுதியான தகவல் இல்லை: கடத்தப்பட்ட போலீசார் , முகம்மது ஈசான், ரூபேஸ்குமார், அபய்யாதவ், கேலக்ஸ் டிடோ  உள்பட 4 பேர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் கண்ணீர் விட்டபடி காத்திருக்கின்றனர், நமது அப்பா உயிருடன் திரும்பி விடுவாரா என்ற ஏக்கத்தில் காத்திருந்தனர் ., ஆனால் மாவோயிஸ்ட்களோ தங்களுடைய முடிவில் பிடிவாதமாக உள்ளனர். பல கெடுக்கள் முடிந்த நிலையில் இன்று காலை 10 மணியுடன் கெடு  முடிந்த நிலையில், கடத்தப்பட்ட 4 போலீசாரில் ஒருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

sham - poovai,இந்தியா2010-09-02 12:44:51 IST
என்ன கொடுமை சரவணன் இது...
மத்திய அரசுக்கு மக்கள் மேல் தேர்தல் சமயத்தில் பொது ஜனங்களை முட்டாளாக்க பொது ஜனங்களை பயமுறுத்தி ஒட்டு வாங்க தங்களது பொது எதிர்களை அழிப்பதற்காக உருவாகிய இயக்கம் இது..... கொஞ்சமும் அக்கறை இல்லை....
ravi - trichy,இந்தியா2010-09-02 12:13:13 IST
both central and state govt should take step to recover those cops. dont think only four cops. if any untowards things happen that may demoralise other cops.be cautious...
தேவராஜ் - கோபி,இந்தியா2010-09-02 12:05:46 IST
மக்களை காப்பாற்ற போராடும் வீரர்களை மீட்க மாநில அரசு வீரர்களை மீட்க கால தாமதம் செய்து ஏன், இது மாநில அரசின் மெத்தனத்தை காட்டுகிறது...
வாசு - சென்னை,இந்தியா2010-09-02 12:02:34 IST
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மம்தா பானர்ஜி லாலு பிரசாத் யாதவ் என்று பல சுயநல கூத்தாடிகள் நம் நாட்டுக்கு செய்த கூட்டு மோசடிதான் இந்த மாவோயிஸ்ட் என்ற கொலைகார கும்பல்.. தேர்தல் சமயத்தில் பொது ஜனங்களை முட்டாளாக்க பொது ஜனங்களை பயமுறுத்தி ஒட்டு வாங்க தங்களது பொது எதிர்களை அழிப்பதற்காக உருவாகிய இயக்கம் இது.....
விஜய் - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-02 11:55:01 ISTமத்திய அரசு ஒரு வீணாப்போன அரசு பி ஜே பி தான் வரவேண்டும் காங்கிரஸ் ஒழிக....
இன்றைய இந்தியா - Tirunelveli,இந்தியா2010-09-02 11:48:27 IST
இந்தியா மாதிரி பாதுகாப்பு இல்லாத நாடு வேறு எங்கும் இல்லை. உயிர்களுக்கு கொஞ்சமும் மதிப்பு இல்லை. மத்திய அரசுக்கு மக்கள் மேல் நாட்டின் மேல் கொஞ்சமும் அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. இன்னும் ஏன் மத்திய அரசு இதில் தலையிடாமல் இருக்கிறது!!, எதோ பக்கத்துக்கு நாட்டில் நடந்து கொண்டிருப்பது போல. ராணுவ வீரர்களோ போலீஸ்சாரோ கொல்ல பட்ட பின்பு மரியாதை செலுத்த மட்டும் வந்திடுவார் இந்த ப.சிதம்பரம். மாவோஇஸ்ட்டுகளை முதலிலேயே ராணுவத்தினரை கொண்டு அடக்கி இருக்கலாம். அதையும் செய்ய வில்லை அவர். அவர் பதவியிலிருந்து விலக வேண்டும். இவர் பொறுப்பேற்ற பின்பு தான் எல்லா தீவிரவாத இயக்கங்களும் மிகவும் வலுவடைந்து விட்டன. அதை ஒடுக்குவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகள் ஒன்றுமில்லை..வெறும் பேச்சு மட்டும் தான் இவருக்கு இருக்கிற பிளஸ் பாயிண்ட். வேற ஒன்னும் இருக்கிற மாதிரி தெரியல. இதுவரை மாவோஇஸ்ட்டுகள் மற்றும் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தாரின் கண்ணீர் இவரையே போய் சாரும். நாட்டு மக்களோட உயிர்க்கு உத்தரவாதம் கொடும்யா. அதுக்கு தான் உமர்க்கு ஒட்டு போட்டு பதவில அமர்த்தி இருக்கு. சொகுசு வாழ்கை வாழ அல்ல. எத்தன தண்டவாளம் தகர்ப்பு!,எத்தன உயிர் பலி! இதுக்கு பிஜேபி கவர்ன்மென் எவ்வளவோ பரவால. காங்கிரஸ் மீது தீவிரவாத இயக்கங்களுக்கு கொஞ்சமும் பயமில்லை. ராணுவத்தை அனுப்பி ஒடுக்குவது தான் சிறந்த வழி. ஆனால் அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும்....
suppiah - பிளார்கல்லல்,இந்தியா2010-09-02 11:37:07 IST
oh god pls save them...
விகடகவி - பாண்டி,இந்தியா2010-09-02 10:59:29 IST
அன்பு சகோதரர்களே, நாம் அபாயகராமான எதிர்காலத்தை பார்க்க வேண்டி வருமோ என்று தோன்றுகிறது.நேற்று இலங்கை நிறைய இழந்துவிட்டு இப்போதுதான் மீண்டுள்ளது.பாகிஸ்தான் மீளுவது சிரமம். உள்நாட்டு நாட்டு தீவிரவாதம் கேன்சரைபோன்று நம்முள் இருந்து நம்மையே அழித்துவிடும் தயவு செய்து போராட்டம் என்று பொய் சொல்லி தீவிரவாதத்தில் அப்பாவி மக்களை பலியிடும் மிருகங்களை துடைதொழிக்க உங்கள் கருத்துக்களாக இங்கோ அல்லது அரசுக்கோ தெரிவியுங்கள்.போராடுவது உரிமை.யாரையும் துன்புறுத்தவோ,கொலைசெய்யவோ உரிமை இல்லை.எல்லோரையும் கொன்றுவிட்டு யாருக்காக இவர்கள் போராடுகிறார்கள்.நமது பாரதம் சீரழிவதை நாம்தான் தடுக்க வேண்டும் வாழ்க இந்தியா...
மு.சதாசிவன். - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்2010-09-02 10:58:21 IST
நேபாளத்திலிருந்து காங்கிரஸ் அரசுக்கு எதிராக மாவோயிஸ்டு ரேடியோவில் பிரச்சாரம் செய்கிறான். இங்கு இந்த ராகுல் உட்பட காங்கிரஸ்காரங்கள் அனைவரும் ஓட்டுக்காக நாய் போல நாக்கை தொங்க விட்டுக்கொண்டு மாவோயிச்டுக்கு ஆதரவாக பேசுகிரான்கள். என்ன கேவலமான பொழைப்பு? இங்கு காங்கிரஸ் உப தலைவர்களையே நக்சல் கடத்தி கொலை செய்கிறான். ராகுலுக்கு நாளைக்கு வரப்போகின்ற பிரதமர் பதவி மேல் ஆசை. அதை கருத்தில் கொண்டு நாட்டின் வளர்ச்சி மிகுந்த பகுதிகளை வருமானம் மிகுந்த பகுதிகளை தங்கள் பிடியில் வைத்து கொண்டு பள்ளிகூடங்களை அழிக்கும் மக்களை மிரட்டும் நம் சகோதரர்களான போலீஸ்களை நமக்கு பாதுகாப்பளிக்க உள்ளும் புறமும் காவல்காக்கும் காவல்காரர்களை கொள்ளும் நக்சல்களை ஆதரிக்கிறான். நம் பாதுகாவலர்கள் தான் இவங்களுக்கும் பாதுகாப்பளிக்கிரார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளட்டும். கான்கிரச்காரகளே ராகுல் பிரணாப் முகர்ஜி இவர்களின் குள்ளனரிதனத்தை கண்டு கட்சியிலிருந்து வெளியேறி விட வேண்டும். நம்மை போன்றவர்கள்தான் காவல் காரர்கள் என்பத உணர்ந்து மக்கள் காங்கிரசை ஒதுக்கி விட வேண்டும். நேரு குடும்பம் நாற்காலி ஆசை பிடித்த குடும்பம்....
vijay - bangalaore,இந்தியா2010-09-02 10:34:51 IST
intha nadum nattu makkalum nasamaga pogatum...
Thangaraj - Maldives,இந்தியா2010-09-02 10:06:29 IST
மந்திரி மகளை கடத்தியதுக்காக பயங்கரவாதிகளை விடுவிக்கவில்லையா? இவர்கள் நமது நாட்டு குடி மக்கள்தானே. மா-வோ-யிஸ்டுகள் கேட்கும் நபர்களை விடுவித்து நமது போலீஸை மீட்க வேண்டும்....

கருத்துகள் இல்லை: