சனி, 4 செப்டம்பர், 2010

7.4 நியூசிலாந்தில் பாரிய நில நடுக்கம்!்

நியூசிலாந்தின் மூன்றாவது பெரிய நகரமான கிறிஸ்ட்சேர்ச் நகரில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 7 தொடக்கம் 7.4 ரிக்டர் அளவில் இந்த அதிர்வு பதிவாகியிருக்கின்றது. இந்த நில அதிர்வினால் பல கட்டடங்கள் இடிந்து நாசமாகியுள்ளதோடு ஒரு சிலர் பாரிய காயங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.
கிறிஸ்ட்சேர்ச் நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் நிலத்துக்கடியில் சுமார் 16.1 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வினாலேயே இந்த பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்வினால் உயிரிழப்புக்கள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை எனவும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்சமயம் மீட்புபணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்ற அதேவேளை அந் நகரத்தில் மின்சாரம், புகையிரத சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: