வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நல்லூர் கந்தசாமி ஆலய பக்தரின் தங்க சங்கிலி பறிப்பு : இருவர் கைது

நல்லூர் திருவிழா காலத்தில் பொதுமக்கள் தமது தங்க ஆபரணங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய உற்சவத்திற்கு வருகைதந்த பொதுமகன் ஒருவரின் தங்கச்சங்கிலி நேற்று முன்தினம் பறித்து செல்லப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் காத்தான்குடி ஆகிய இடங்களை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர்.
இதனையடுத்தே பொலிஸார் பொதுமக்களுக்கு தமது தங்க ஆபரணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: