வியாழன், 2 செப்டம்பர், 2010

சென்னையில் ரணில் விக்கிரமசிங்: ராஜபக்சே மீது புகார


இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது ராஜபக்சே அரசு குறித்து புகார் கூறினார்.
இலங்கையின் எதிர்க்கட்சியான  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தலைமையில் நேற்று கொழும்பில் கட்சியின் மத்திய குழு கூட்டம் நடந்தது.
இதையடுத்து அவர் இன்று டெல்லி செல்வதற்காக  கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.   டெல்லி செல்லும் வழியில்  சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,  ‘’இலங்கைத்தமிழர்கள் மீள்குடியேற்றத்திற்கு இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளில் திருப்தி ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும்,  ‘’மீள்குடியேற்றம் குறித்து இலங்கை அரசு எதிர்க்கட்சிகளை ஆலோசிக்கவில்லை.  ராஜபக்சே அரசின் செயல்பாடு சரியில்லை’’ என்று புகார் கூறினார்.

கருத்துகள் இல்லை: