வியாழன், 2 செப்டம்பர், 2010

போதை விவகாரத்தை திசை திருப்ப த்ரிஷாவின் டெக்னிக்!

ஒரு பரபரப்பை இன்னொரு பரபரப்பால்தான் அடக்க வேண்டும் என யாரோ த்ரிஷாவிடம் சொல்லிவிட்டார்கள் போல.

போதை மருந்து விவகாரத்தில் த்ரிஷாவின் பெயர் ஏகத்துக்கும் ரிப்போராகிக் கொண்டிருக்க, அவரோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்கு அட்வைஸ், கருத்து என தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வருகிறார்.

ஏற்கெனவே அசின் இலங்கை போன விவகாரத்தில் கருத்து சொல்லியிருந்த த்ரிஷா, இப்போது மீண்டும் அதுபற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.

"அசின் இலங்கைக்குப் போனதே தவறு. இங்கே உள்ள பிரச்சினைகள் தெரிந்தும் அவர் வேண்டுமென்றே போனது போலாகிவிட்டது.

இப்போதும் சொல்கிறேன்... என்னை அழைத்திருந்தால் நிச்சயம் நான் போயிருக்க மாட்டேன்..." என்று கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம், கேட்டால் கூட கல்யாணம் பற்றி பதில் சொல்லாமல் தவிர்க்கும் த்ரிஷா, இப்போது தானாகவே முன்வந்து கல்யாண மேட்டரையும் பேசுகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "எல்லோரும் என் கல்யாணம் பற்றியே கேட்கிறார்கள் (இதுபற்றி அந்தப் பேட்டியில் கேள்வியே இல்லை!). நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். நிச்சயம் முன் பின் தெரியாதவரை கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன்" என்று கூறியுள்ளார்.

இந்த போதை மருந்து விவகாரத்தில் பெயர் கெட்டாலும், த்ரிஷாவுக்கு ஒரு பெரிய லாபமாம்... பாலிவுட்டில் இப்போது அவரைப் பற்றித் தெரியாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறதாம்!

கருத்துகள் இல்லை: