வியாழன், 2 செப்டம்பர், 2010

மண்பானைத் தண்ணீர் தான் குடிக்க பாதுகாப்பானது

மண்பானைக் குடிநீர்
ல்வேறு பானைகளில் இருக்கும் நீரைத்தான் நாம் குடிக்க பயன்படுத்துறோம். ஆனால், அது பாதுகாப்பானதா என்று நாம் சோதனை செய்வதில்லை. எந்த பாத்திரத்தில் உள்ள குடிநீர் நல்லது என்று ஹைதராபாத்தில் இருக்கும் தேசிய ஊட்ட உணவுக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டது. இதற்காக அவர்கள் அலுமினியம், எஃகு, மண்பானை பாத்திரங்களை ஆய்வுக்கு எடுத்தனர். மூன்று பானைகளிலும் நீரை நிரப்பினர். முதல் மூன்று மணி நேரம் வரை, மூன்று பானைகளிலும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. நீரில் உள்ள நுண்ணிய துகள்கள் அடியில் தங்குவதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர். ஆனால் அதற்குப் பிறகு எஃகு மற்றும் அலுமினியப் பானைகளில் உள்ள நீரில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாகியபடி இருந்தது. மண்பானையில் உள்ள நீரில் மட்டும் பாக்டீரியாவின் அளவு குறைவாக இருந்தது. பக்டீரியாக்களை களிமண் உறிஞ்சிக் கொள்வது தான் இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்தனர். எனவே மண்பானைத் தண்ணீர் தான் குடிக்க பாதுகாப்பானது என்று அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை: