வெள்ளி, 3 செப்டம்பர், 2010

படிச்சுப்படிச்சுச் சொன்னாலும் றேடியோவில் போய் நாயாய் கத்தினாலும் இணையத்தளத்தில் எழுதிக் கிழித்தாலும்

மாப்பு வைச்சுட்டாண்டா ஆப்பு
ஜெர்மனியில் ஸ்ருட்கார்ட் என்று ஒரு நகரம் தென்பகுதியில் உள்ளது. அங்கு இரண்டு பிள்ளையார் கோவில்கள் உள்ளன. அதில் ஒன்றை  புலிகளின் பிள்ளையார் கோவில் என அழைப்பார்கள். கோவில் இரண்டாகப்போனது ஏன் என்பதை பின்னொரு கட்டுரையில் சொல்கிறேன். புலிகளின் பிள்ளையார் கோவில் தலைவர்கள் சுத்துமாத்துப்பேர்வழிகளாக இருந்தவர்கள். முதலில் மகேந்திரராஜா என்று ஒருத்தர் இருந்தவர். ஜெர்மன் புலிகளின் விளையாட்டுத்துறையில் பொறுப்பாக இருந்தவர். 86ம் ஆண்டுகளில் கனடாவிற்கு ஆட்களை கப்பலில் அனுப்புகிறேன் என பல தமிழர்களிடம் பணத்தை வாங்கி ஏப்பம் விட்டார். இவர் புலிகளின் கோவிலின் தலைவராக இருந்தார்.
இவர் போய் அடுத்தவர் இலகுநாதன் எண்டு இன்னொருத்தர் வந்தார். இவரும் புலிவால்தான். மொட்டைத்தலையரான இவர் திருமணம் செய்வதற்காக தலையில் டோப்பாவை போட்டு படம் எடுத்து இலங்கைக்கு அனுப்பி வைக்க   பெண் ஒருவரை இவரது வீட்டார் இவருக்கு மனைவியாக அனுப்பி வைத்தனர். டோப்பா போட்டு என்னை ஏமாற்றி விட்டார் என பெண் குழறி அழ அந்தப்பெண்ணின் காலில் விழுந்து என்னை விட்டுப்போகாதே என அழுது திருமணம் செய்து கொண்டார். இவர் குடியிருந்த வீட்டுரிமையாளர் வயதான ஒரு ஊனமுற்ற ஜெர்மன்காரர். அவருக்கு மாதக்கணக்கில் வீட்டுவாடகை செலுத்தாமல் பாக்கி வைத்து விட்டு லண்டனுக்கு குடும்பத்துடன் ஓடி விட்டார்.
மூன்றாவதாக கோவிலுக்கு தலைவராக வந்தவர் குணபாலசிங்கம் என்றொரு புலி ஆதரவாளர். திருஞானசம்பந்தருக்கு உமாதேவியார் ஞானப்பால் கொடுத்தபோது எப்படி சம்பந்தரின் முகம் இருந்ததோ அப்படி ஒரு முகம். இவர் தலைமையில் பல சீட்டுக்கள், வட்:டி வியாபாரம் என தமிழர்களின் இல்லீகல் பங்குச்சந்தைகள் ஓகொ என்று வளர்ந்தது. 60க்கு மேற்பட்டவர்கள் இவருடைய சீட்டு வட்டிகளில் ஈடுபட்டு வந்தனர். கோவில் தலைவராக இருந்ததினாலும் அப்பாவியாக முகத்தை போஸ் கொடுத்து வந்ததினாலும் இவரில் நம்பிக்கை வைத்திருந்தனர்.
நடந்தது என்ன?.  தமிழர்களின் இல்லீகல் பங்குச்சந்தையான இந்த சீட்டு வட்டி வியாபாரத்தில் பணத்தை பலர் பறிகொடுத்திருக்கின்றனர். குணபாலசிங்கம் திடீரென்று தலைமறைவாகி விட்டார். ஆப்பு வைத்த தொகை 7லட்சம் யுரொக்களாம். சீட்டுக்காசு வட்டிக்காசு என இவரிடம் கொடுத்து வைத்தவர்கள் எல்லாம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் குமறிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களை தமிழர்களே முட்டாளாக்குகிறார்கள். புலிகளின் விசுவாசிகளாக இருந்தவர்கள் இந்த விடயத்தில் கில்லாடிகள். தமது கில்லாடி வேலைகளுக்கு எந்தவித பங்கமும் வரக்கூடாது என்பதற்காகவே புலிகள் அமைப்புடன் சேர்ந்து வேலை செய்தார்கள். குணபாலசிங்கம் புலிவிசுவாசி.  புலிகளின் கோவில் தலைவரும் கூட. கள்ளத்தனமாக நடைபெறும் சீட்டு வட்டி வியாபாரங்கள் இறுதியில் இப்படி ஒரு பரிதாபமாக முடிந்தும் பல தமிழர்கள் அதில் ஏன் ஈடுபடுகிறார்கள் என்றால் மக்களை பிழிந்து லாபம் சம்பாதிக்கும் வழியாகும். சீட்டில் கழிவுச்சீட்டு என்கிற செக்ஷனில்தான் தமிழர்களுக்கு அலாதி ஈடுபாடு. முதலில் பணம் எடுப்பவனை ஆகக்கூடிய அளவு முதலில் அவனுக்கு கிடைக்கவிருக்கும் பணத்தை குறைப்பது. உதாரணமாக 10000 சீட்டுபெறுமானம் என்றால் 6000யுரோ வரை குறைப்பது. ஏனெனில் தாங்கள் கட்டவிருக்கும் தொகையை குறைப்பதற்காகும்
அவசரத்தில் பணம் தேவையென முதலில் சீட்டு எடுப்பவனை வறுகி எடுப்பதாகும். அதுபோல்தான் வட்டியும். இப்படி அடுத்தவர்களின் கஷ்டத்தில் சுகபோகம் காணும் தமிழர்களுக்கு குணபாலசிங்கம் வைச்சிட்டாண்டா ஆப்பு.
படிச்சுப்படிச்சுச் சொன்னாலும் றேடியோவில் போய் நாயாய் கத்தினாலும் இணையத்தளத்தில் எழுதிக் கிழித்தாலும் புலிகளை நம்பி மோசம் போன இந்த ஜென்மங்களுக்காக வருத்தப்படுவதில் என்ன பலன். அனுபவி ராஜா அனுபவி

கருத்துகள் இல்லை: