வியாழன், 2 செப்டம்பர், 2010

'ராஸ்கல்'... 'என்னய்யா தலைப்பு இது'?விஜய் நடிக்கும்

விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் ஒரு படத்துக்கு ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்குவதாகவும், தலைப்பை மாற்றுங்கள் என இப்போதே கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெமினி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஆர்யா, ஜீவா இணைந்து நடிக்கிறார்கள். தமன்னா நாயகியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் படத்தின் ரீமேக் இது.

இந்தப் படத்துக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால் அதற்குள் இந்தப் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இந்தப் படத்துக்கு ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக இணையங்களிலும் சில வார இதழ்களிலும் செய்தி வந்துள்ளது. இது விஜய் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.

விஷயம் கேள்விப்பட்டு, விஜய் ரசிகர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "என்ன தலைப்புய்யா இது... தயவு செய்து படத்தின் பெயரை மாத்துங்க. ஏற்கெனவே அந்தப் பெயரைச் சொல்லித்தான் வீட்டிலும் வெளியிலும் திட்டுகிறார்கள். இந்த லட்சணத்தில் படத்தின் பெயரே இப்படி இருந்தால் வெளங்கின மாதிரிதான். 'ராஸ்கல் விஜய் ரசிகர் மன்றம்' என்று பெயர் வைத்தால் நல்லாவா இருக்கும்?" என்று சலித்துக் கொள்வதாக ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே ராஸ்கல் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்தார் ஜெயம் ரவி. ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அறிவுரை சொன்னதால் அந்தப் படத்துக்கு 'தாஸ்' என்று தலைப்பிட்டது நினைவிருக்கலாம்!

பதிவு செய்தவர்: ஈவிரா நாயக்கன்
பதிவு செய்தது: 02 Sep 2010 6:51 pm
ராஸ்கல், பேமானி, சோமாரி, கயிதே, கஸ்மாலம், சாவுகிராக்கி , இதுதானே சினிமா உலகம்...அதனால் ராஸ்கல் பெயரில் தப்பு இல்லை..

பதிவு செய்தவர்: ஷங்கர்
பதிவு செய்தது: 02 Sep 2010 6:51 pm
3 "ஜீவி" ன்னு வைக்கலாம். அறிவு "ஜீவி"

கருத்துகள் இல்லை: