வியாழன், 2 செப்டம்பர், 2010

நடிகைகளை ஜவுளிக் கடை விளம்பரங்களில் நிறையப் பார்க்க

வரப் போகிறது தீபாவளி. அதை வெளிக்காட்டும் வகையில் டிவி பொட்டிகளைத் திறந்தால் தீபாவளி விளம்பரங்கள் களை கட்ட ஆரம்பித்துள்ளன.

பண்டிகைக் காலங்களில் வழக்கத்திற்கு மாறாக விளம்பரங்கள் தாறுமாறாக இருக்கும். குறிப்பாக தீபாவளிப் பண்டிகையின்போது இது இரண்டு மடங்காக உயர்ந்து விடும்.

சமீப காலமாக புகழ் பெற்ற நடிகைகளை ஜவுளிக் கடை விளம்பரங்களில் நிறையப் பார்க்க முடிகிறது. முன்பு ஜோதிகா அதில் கொடி கட்டிப் பறந்தார். பின்னர் அந்த இடத்தை புன்னகை இளவரசி சினேகா பிடித்துக் கொண்டார். இன்றைய தேதியில் அதிக அளவிலான விளம்பரப் படங்களில் நடித்த, நடித்து வரும் சாதனை சினேகாவிடம் மட்டுமே உள்ளது.

அப்பளம் விளம்பரம் முதல் பட்டுச் சேலை விளம்பரம் வரை பளிச் பல் வரிசையுடன் சினேகா பளபளப்பாக வந்து போவதைப் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் இந்த வருடத்து தீபாவளி ஜவுளிக் கடை விளம்பரங்களில் ஒரு சின்ன விசேஷமான மாறுதல். இந்த முறை அனுஷ்காவும், தமன்னாவும்தான் நிறைய புக் ஆகியுள்ளனராம்.

இந்த இரு நடிகைகளையும் முன்னணி நிறுவனங்கள் புக் செய்து பெரும் பொருட் செலவில் விளம்பரப் படங்களைத் தயாரித்து களத்தில்இறக்கியுள்ளன. இதுபோக சினேகாவும் கூட வழக்கம் போல தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளாராம்.

அதேசமயம், நயனதாராவை அணுகிய நிறுவனத்திற்கு இதுவரை நயன் தரப்பிலிருந்து பதில் ஏதும் போகவில்லையாம்.

பொங்கல் வர்றதுக்குள்ளயாவது பதிலை சொல்லி அனுப்புங்க சேச்சி...!

கருத்துகள் இல்லை: