வெள்ளி, 3 செப்டம்பர், 2010

மன்னார்,கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் கடந்த மாதம்


மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளி பகுதியில் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு : கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!


மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளி பகுதியில் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பாகக் கடந்த திங்கட்கிழமை (30 ஆம் திகதி) ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக்கொலை தொடர்பாக தாம் மேற்கொண்ட புலன் விசாரணைகளைத் தொடர்ந்தே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சுமார் 50 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் மீது, நேற்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.
நேற்று புதன்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இவர் மீது நடத்தப்பட்ட விசாரணையையடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: