சனி, 4 செப்டம்பர், 2010

போலீசார கடத்திய முக்கியப்புள்ளி கைது; 3 போலீசார் உயிருடன் மீட்கப்படுவார்களா ?

பாட்னா :  பீகார் மாநிலம் ஜம்முயி மாவட்டத்தில் அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்டு முக்கிய தலைவன்‌‌ பிரமோத் கைது செய்யப்பட்டான். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று லக்கிசராய் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 4 போலீஸ்காரர்களை கடத்தினர். இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவன் பிரமோத் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை ( சனிக்கிழமை ) முதல்வர் நிதீஷ்குமார் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். காலம் தாழ்ந்து நடக்கும் இக்கூட்டத்தால் எவ்வித பயனும் இருக்காது என முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.  இதற்கிடையில் பாதுகாப்பு படையினர் கடத்தி செல்லப்பட்ட போலீசாரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு தயார்:  பீகாரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட போலீசாரை விடுவிப்பது குறித்து மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போலீசாரை விடுவிக்க மாவோயிஸ்ட்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக நிதிஷ்குமார் கூறினார். போலீசாரை துன்புறுத்த வேண்டாம் என்று மாவோயிஸ்ட்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மாவோயிஸ்ட்களுடன் பேச்சுநடத்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் போலீசாரை விடுவிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

சமூக ஆர்வலர்கள் பேட்டி : "பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற போலீசாரை நக்சலைட்கள் கொன்றது அவர்கள் மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும்' என, சமூக ஆர்வலர்கள் மேதா பட்கர் மற்றும் சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளும், நக்சலைட்களுமே காரணம். பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற போலீஸ்காரர் ஒருவரை நக்சலைட்கள் கொடூரமாக கொன்றிருப்பதன் மூலம், அவர்கள் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. அதை அவர்கள் மீட்பது கடினம்.

நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. நல்ல சிந்தனை கொண்ட யாரும் இந்தப் படுகொலையை ஆதரிக்க மாட்டார்கள்.பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக மாவோயிஸ்டுகள் பல முறை கூறினர். இருந்தும் அவற்றை எல்லாம் அரசு கண்டு கொள்ளவில்லை. போலீசார் மற்றும் துணை ராணுவப் படையில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தான், நக்சலைட்களின் தாக்குதலுக்கு இரையாகின்றனர்.

நக்சலைட் தயவு காட்டினால் தான், போலீசார் வாழ முடியும் என்ற சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கிவிட்டன.இதுபோன்ற படுகொலைகள் தொடர்வது தடுக்கப்பட வேண்டுமெனில், நக்சலைட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அரசு தொடர்ந்து அமைதியாக இருந்தால், சாதாரண மக்கள் தான் பாதிக்கப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
rajamohamed - riyadh,சவுதி அரேபியா
2010-09-04 19:40:02 IST
தி.பா.ரமணி ..அவர்களின் வாதம் மிகச்சரியே!. தீவிரவாதிகள் பிறப்பதில்லை, மாறாக அரசாங்கத்தால்தான் பெரும்பாலும் உருவாகப்படுகிரார்கள். எந்த நாட்டில் தீவிரவாதம் அதிகமான பிரச்சனையாக இருக்கிறதோ, அந்த நாட்டில், நேர்மையான ஆட்சி நடைபெறவில்லை என்று அர்த்தம்.மக்களாவது நேர்மையாக இருக்க வேண்டும். இல்லையேல் அந்நாட்டின் நிலை ரொம்ப மோசமாகி விடும்....
selvakumar - sirkalinagaidistrictகேம்ப்singapore,இந்தியா
2010-09-04 18:17:53 IST
இந்தியன் பாலிடிக்ஸ் வெரி வெரி bad...
சாமி - MUSCAT,ஓமன்
2010-09-04 16:26:51 IST
இதுக்கு நம்ம உள் துறை அமைச்சர் சிதம்பரம் என்ன சொல்ல போகிறார்" . எப்படியாயினும் நாங்கள் "மாவோயிஸ்டுகளை வெற்றி பெற விட மாட்டோம்" என்று சொல்ல போகிறாரா?????????...
பாலா ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-09-04 16:12:04 IST
கோவை பாலா! குற்றவாளிகளை ஒழிக்க அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்களின் கருத்தை கேட்டு செய்வதில்லை! நீங்கள் வன்முறைக்கு துணை போவது உங்கள் பிரச்சினை. கருத்துக்கூற உங்களை போலவே எனக்கும் உரிமை உண்டு. உங்களுக்கு ac ரூம் இல்லை என்றால் அது என் தவறு அல்ல!...
2010-09-04 15:38:04 IST
உயர் திரு மேத்தா அவர்களுக்கு, நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் உள் நாட்டு கம்பெனிகளில் விலை போனர்களா இல்லை வெளி நாட்டு கம்பனிகளுக்கு விலை போனதா கடவுளுக்குத்தான் தெரியும். அதை எப்படி திருப்பி கொடுக்க முடியும் அதுதான் இங்கு பிரச்னை இதில் நாட்டு மக்களும் அதிகாரிகளும் சாகவேண்டியதுதான் வாங்கியவர்கள் ஜாலியாக இருப்பார்கள் அது நம் தலை விதி என்று போகவேண்டியதுதான் மனம் கொதிக்கிறது என்னால் என்ன செயமுடியும் வருதபடத்தான் முடியும் ஒன்றும் கிழிக்கமுடியாது. தமிழக மக்கள் திருந்தாதவரை மேலும் இந்திய மக்களையும்தான் சொல்கிறேன் எல்லாம் தலை விதி நன்றி தினமலர் ஆசிரியர்களுக்கு .அவர்களை அழைத்து பேச முடியாத அரசு அரசாக இருக்க முடியாது அது இடைதரகர் வேலை செய்கிறது...
vibin - marthandam,இந்தியா
2010-09-04 15:11:15 IST
ஒரு போலீஸ் காரரை தீவிரவாதிகள் கொன்ற உடனேயே ஜெயிலில் இருந்த தீவிரவாதிகளில் மூன்றுபேரை போலீசார் சுட்டு கொன்றிருந்தால், இனிமேல் இப்படி நடக்காது...
evsmani - chennaiindia,இந்தியா
2010-09-04 14:18:20 IST
first we should dismiss Railway Minister Mamtha Banerjee who is supporting right from the beginging. she is wholly responsible for all including all railaay accidnets. . The Bihar Govt. along with Central Govt. should talk immediiately with them and find a amicable solution. that is the only best way.to solve the problem....
அழ்று - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-04 13:45:37 IST
Who is Necel & what they want? Why they are doing Like this? Anybody nos that? No! This is Politics. India govt or Ministers are doing nothing. Govt increasing only taxes. They are not given proper responds to people. Past two years How many people and Police officers are Killed. But The Govt Giving One minute of them. If any thing happen with him or his family on that time they should realize how the peoples are spend that places. Really India govt is waste. India can't achive any thing with changing political team and leaders....
பழனி - chennai,இந்தியா
2010-09-04 12:32:23 IST
தீவிரவாதி உருவாக காரணம் அரசு தான்...எந்த ஒரு போராட்டத்துக்கும் பின்னால் கண்டிப்பாக ஒரு அரசியல் வாதி அல்லது ஒரு அரசின் துரோகம் இருக்கும்......
கிருஷ்ணா - Bangalore,இந்தியா
2010-09-04 12:26:47 IST
ரமணியின் வாதம் முட்டாள் தனமானது, எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆயுதம் ஏந்துவது தீர்வாகாது. அப்பாவி காவலர்களும் பொது மக்களும் கொல்லப்படும்போது தீவிரவாதிகளை அடக்க கடுமையான வழிமுறைகளை பயன்படுத்த வேண்டும்...
பாலாஜி - ஜுபைல்,சவுதி அரேபியா
2010-09-04 12:17:04 IST
முதலில் இந்த மேத்தா பட்நாகர் போன்ற , அறிவு ஜீவிகளை நாடு கடத்தவேண்டும்....
மோகன் குமார் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-09-04 11:56:05 IST
இந்த வன்முறை கு காரணம் நாமலும் நம்ப அரசும் தான்...!!!! அப்பாவி மக்கள் உயிரை பற்றி அரசியல் வாதிகள் கவலை படுவதாக தெரியவில்லை..!!! அரசியல் வாதிகளின் உறவினரை இப்படி கடத்தி கொலை செய்து இருந்தால், இப்படியா சும்மா இருபார்கள் ??? நம்ப நாட்டோட சட்டம் சரி இல்லை... குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் தான் குற்றங்கள் குறையும்...!!! இன்ற சூழ்நிலையில், மக்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை உள்ளது... அரசு நக்சலைட் உடன் உடனடியாக பேசு வார்த்தை நடத்தி, இந்தியவை அமைதியான ஒரு நாடாக மாற்ற வேண்டுகிறேன்...!!! தயவு செய்து, இந்த பிரச்சனையை, அரசியில் ஆகாதீர்...!!! இறந்த அந்த ஆத்ம சாந்தி அடைய பிராத்திப்போம்.!! HURT NEVER...!!!!! SERVE EVER....!!!!!...
selvi - Erode,இந்தியா
2010-09-04 11:28:46 IST
மேதா பட்கர் போன்றவர்கள் லூசுகள்.. நாட்டில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எவரும் தேச துரோகிகள் ஆவார்கள்.....
INDRAJIT - BENARES,இந்தியா
2010-09-04 11:25:22 IST
DEAR MR தி.பா.ரமணி - திருநெல்வேலி,இந்தியா ! எந்த விபச்சாரியிடம் " நீ ஏன் விபச்சாரி ஆனாய் ? " என்று கேட்டால், நீங்கள் இப்போது சொன்ன அதே காரணங்களைத்தான் அவளும் கூறுவாள், கூறியிருக்கிறாள், உண்மைக் கதை எழுதியவர்களிடம் ! அந்தக் காரணங்களாலேயே அவர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் அங்கீகரித்து விட முடியுமா ? தற்கொலை செய்ய முயற்சிப்பது தண்டனைக்குரியது என்றுதான் சட்டம் சொல்கிறது . நான் வாழ வழி செய்யாத சட்டம் என்னைக் கட்டுப் படுத்த முடியாது என்று சொல்ல முடியாது. வாழத்தான் நமக்கு உரிமை தரப்பட்டு இருக்கிறதே அன்றிச் செயற்கையாகச் சாவதற்கு அல்ல ! உங்கள் கூற்றுப்படி அரசு முடிவெடுத்தால், முதலில் போலீஸ் & ராணுவ இலாக்காகளை இழுத்து மூடி வீட்டுக்குத்தான் அனுப்ப வேண்டும். பிறகு, இது இன்னொரு சோமாலியா ! பரவாயில்லையா ? 1967 ல், COMEDIANS என்ற, ஆப்ரிக்க நாட்டில் உள்ள ஒரு கற்பனை நாட்டைப் பற்றிய, அமெரிக்கப் படம் வந்தது ( LIZ & BURTON நடித்தது ) அப்படியே இன்றைய சோமாலியா & இன்றைய சில இந்திய மாகாணங்கள் தான் ! அந்த CD கிடைத்தால் வாங்கிப் பார்த்து விட்டு, மறுபடி உங்கள் கருத்தை இங்கு எழுதுங்கள் !...
bala - Coimbatore,இந்தியா
2010-09-04 11:25:12 IST
பாலா ஸ்ரீனிவாசன் அவர்களே... நக்சல், மாவோயிஸ்ட் யார் எண்று அந்த ஊர் மக்களிடம் கேட்டுப்பாருங்கள்.... சும்மா ஏ.சி ரூமில் இருந்து பிதாமாகர் மாதிரி பேசாதீங்க... பாதிக்கப்பட்ட அந்த் ஊர் மக்களிடம் சரின்னு சொன்னா அவர்களை அடியோடு ஒழிங்க......
gknatarajan - chennai,இந்தியா
2010-09-04 11:19:38 IST
as usual mr lallu wants to make political gain by fishing in troubled waters at this tragedy!all should support nitishkumar in his actions and give constructive sudgestions!dis unity will give only strengthto these criminals!...
உதயா - சென்னை,இந்தியா
2010-09-04 11:12:14 IST
true its govt careless... but we cant allow this kind of terrorism even if they have a reason... who doesnt have reason...? everyone has!. no difference terrorism of outside and inside country. this cannot be allowed in anyways. naxals should be warned, i dont think we cant warn anymore... time to take action to erase all of them. and govt should have been heard their requests long ago.... govt was thinking that what they can do... but now govt thinks even if not talk govt wont be survive. life is not that cheap....
பொன்னி - தோஹா,கத்தார்
2010-09-04 10:50:48 IST
டோய் மானங்கெட்ட அரசியல் வாதிகளா..மக்களுக்காக தான் அரசாங்கம்..அரசாங்கத்துக்காக மக்கள் அல்ல..பணம் சம்பாதிக்க அரசாங்கத்துக்கு எத்தனியோ வழி இருக்கு..ஆனால் நீங்க அத யோசிக்காம மக்களுடய உரிமைகளை காசாக்க நினச்சா இதுதாண்டா நடக்கும். பாவம் அரசாங்கத்த நம்பி தன் உயிர் பாதுகாக்கப்படும் ன்னு நினச்சி போலீஸ் கடசில செத்துபோறான் பாரு. இதுதாண்டா மிகக்கேவலம். பாதுகாப்பே இல்லாத ஒரு நாடு எதுன்னு சொன்னா அது இந்தியா தாண்டா.. அதான் அமேரிக்கர்கள அமெரிக்கா இந்தியாவுக்கு போகாதிங்கன்னு சொல்றான்.....
அம்பானி - n,இந்தியா
2010-09-04 07:55:41 IST
யாரும்மா நீ ..புதிதாக மைக்கை பிடித்து கொண்டு பேசுகிறாய் ...நீ சமூக ஆர்வலர்...அப்படி என்றால் என்ன ...சமூகத்தின் மீது உமக்கு என்ன ஆவல் ... அவனவன் இங்கே செத்து கொண்டு இருக்கிறான் ...உம்மால் என்ன செய்ய முடியும் ..மீறி போனால் அறிக்கை விடுவீர் ...மைக்கை பிடித்து உளருவீர்கள்... நக்சல்களை யாரும் நம்பினால் என்ன ...நம்பாவிட்டால் என்ன ...அப்பாவி மக்கள் பலி ஆகிறார்கள் ..நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கம் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது ... சமூக ஆர்வலர் சரி ..மனித உரிமை யும் சரி ..பெரிய அரசியல் வாதிகளுக்கு எதாவது குறை என்றால் குரல் கொடுப்பார்கள் ...இல்லாவிடில் இருக்கிற இடம் தெரியாது .......
மம்தா பானர்ஜி - singapore,சிங்கப்பூர்
2010-09-04 07:44:11 IST
அப்புறம் ஏண்டி நீயும், அருந்ததிராயும் அந்த மிருகங்களுக்கு போய் சப்போர்ட் பண்ணுனீங்க...
Akash - chennai,இந்தியா
2010-09-04 07:21:56 IST
"தி.பா.ரமணி" அப்போ மற்ற தீவிரவாதிகள் எல்லாம் பிறப்பால் தீவிரவாதிகள? அது என்ன நக்சலைட்டுக்கு ஒரு விதி மற்றவர்களுக்கு ஒரு விதியா?...
ராஜ் - சென்னை,இந்தியா
2010-09-04 07:01:49 IST
அரசியல்வாதிகள்தான் தீவரவாதம் உருவாவதற்கு முழு பொறுப்பு. அதே சமயம் நச்சலைட்டுகள் பலி வாங்குவது ஒன்றும் அறியாத அப்பாவி பொதுமக்களை. நாமெல்லாம் மத்தளம் போலத்தான். வி நீட் எ காமராஜ் அகெய்ன்....
pavi - pazhaponachennai,இந்தியா
2010-09-04 06:16:25 IST
நக்சல் ஒரு போலீஸ் கொலை செய்ததற்கு நம் வருந்துகிறோம். ஒரு மாநிலம் (தமிழகம்) முழுவதும் ஒரு குடும்ப நக்சல், மாவோயிஸ்ட் மேலும் பல தீவிரவாத கும்பல் உருவமான அரசிடம் மாட்டி தினமும் பல கொலை கள் அதிகாரத்துடன் செய்கிறார்களே அதை ஏன் மத்திய அரசோ ப்ரெசிடென்ட் ஒ கவலை படுவதில்லை ?...
பாலா ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-09-04 06:13:15 IST
மண்ணாங்கட்டி! என்னமோ நக்சல்களுக்கு பெரிய நம்பகத்தன்மை இருந்தா மாதிரியும் இப்போ அது காணாம போயிட்டா மாதிரியும் இந்த அம்மா கூச்சல் போடுது! இவங்க மாதிரி இருக்கிற பேர்வழிகள் அவுங்க பக்கம் பேசியும், மீடியா அந்த வன்முறைக்கு ஆதரவு குடுத்தும்தான் இந்த விஷம் பரவிச்சு. இதுக்கு அப்புறமும் இவுங்க ஆதரிச்சு அறிக்கை விட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் டின் கட்டிடுவான்கன்ற பயம் இப்புடி பேச வெக்கிது! எனக்கு என்னமோ இவங்களுக்கும் அவுனுகளுக்கும் ஒரே இடத்துலேர்ந்துதான் காசு வருதுன்னு தோணுது !...
பாலா ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-09-04 06:00:36 IST
திரு.ரமணி அவர்களே, சமூக விரோதிகள் அனைவருக்குமே வறுமை, குடும்ப சூழல், அரசு அதிகாரிகளின் மெத்தனம், லஞ்சம், ஊழல் என்று எதாவது காரணம் இருக்கத்தான் செய்யும். ஆனால் வன்முறையை நியாப்படுத்தி அதற்கு வியாக்கியானம் அளித்துக்கொண்டு இருந்தால் அமைப்பு- அது எவ்வளவு குறைகள் உள்ளதாக இருந்தாலும்- சிதைந்துவிடும். தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை உருவானால் இலத்தீன் அமெரிக்க அல்லது ஆப்பிரிகா குடியரசுகள் போல் இன்னும் மோசமாக போய்விடுவோம். அமைப்பிலிருக்கும் குறைகளை களைய தளாராமல் முயற்சி செய்வதை தவிர வேறு வழி இல்லை. உண்மை, நமது ஜன நாயகம் மிக மோசமானதுதான் ஆனால் மாற்று வழி முறைகள் அதையும் விட மோசமானவை !...
G Sankaran - Cupertino,யூ.எஸ்.ஏ
2010-09-04 05:37:45 IST
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத அரசு இருந்தென்ன பயன்?...
paddyfather - சென்னை,இந்தியா
2010-09-04 03:18:41 IST
நாட்டின் பாதுகாப்பிற்கு எவர் சோதனை செய்தாலும் அவர்களை அடியோடு ஒழிக்க வேண்டும்; கட்சி பேதமின்றி. இந்தக் குறிக்கோள் இல்லாத எந்த அரசும் அரசாகாது....
தி.பா.ரமணி - திருநெல்வேலி,இந்தியா
2010-09-04 02:41:33 IST
பிறப்பால் இவர்கள் நக்சலைட்டா ? அவர்களும் ஒருகாலத்தில் நம்மைப் போல பொது ஜனம்தானே.பிறகு எப்படி இப்படி ஆனார்கள் ? யார் ஆக்கினார்கள் ? புழு கூட நசுக்கப் படும்போது,பலம் இருக்கிறதோ இல்லையோ கடைசிவரை போராடுகிறதல்லவா ? மனிதன் என்ன விதி விலக்கா ? உரிமைகள் பறிகொடுக்கும் போது அரசோ,அரசு அதிகாரிகளோ கண்டு கொள்ளாமல் இருப்பதும்,சிலசமயம் வேலியே பயிர்களை மேயும் போதும்தான் நம்பிக்கை இழந்து வேறு வழி இல்லாமல் சட்டத்தை கையில் எடுக்கிறான்.சந்தர்ப்ப வசத்தால் புலி வாலை பிடித்தவனுக்கு விட முடியவில்லை.விட்டால் புலி கடித்து விடும்.ஜெயித்தால் வீரன்,தலைவன் என்ற பட்டம், பெருமை.. பெரும்பாலும் அரசங்கம் வெறும் அட்டை புலிதான் என்பதை தெரிந்துதான் களமிறங்குகிறார்கள்.இதில் இவர்களை மட்டும் குறை கூறுவதில் என்ன அர்த்தம் ?...

கருத்துகள் இல்லை: