வியாழன், 2 செப்டம்பர், 2010

கிழக்கில் 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும்

கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவினால் 10,000 வீடுகள்: நிருபமாராவ், முதலமைச்சர் சந்திப்பில் ஆராய்வு
கிழக்கில் இடம் பெயர்ந்த, மீளக்குடி யமர்த்தப்பட்ட, வீடுகளை இழந்தவர்களுக் கும் சுமார் 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நம்பிக்கை வெளியிட்டார். திருகோணமலையில் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார். இச் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை அமைப்பது தொடர்பாகவும் இடம் பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மீளக்குடியமர்த்தப்பட்ட வட பகுதி மக்களு க்கு இந்தியா சுமார் 51,000 வீடுகளை வழங் குகிறது. அதேபோல, கிழக்கு மாகாணத் திற்கும் முதலமைச்சரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இந்தியா இதற்கு சாதகமான பதிலை அளிக்கும் என உறுதியளித்தார்

கருத்துகள் இல்லை: