சனி, 4 செப்டம்பர், 2010

தினகரன் அலுவலகத்திற்கு நேர்ந்த கதியே ஏற்படும்-ஜெயா டிவிக்கு மிரட்டல்

முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை குறித்த செய்தியை தொடர்ந்து ஒளிபரப்பினால், மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் ஏற்படும் என ஜெயா டிவிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

இதுகுறித்து ஜெயா டிவி செய்திப் பிரிவு துணைத் தலைவர் கே.பி.சுனில் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த மிரட்டல் குறித்து சுனில் கூறுகையில்,

வைகைப் புயல் பாலு, மதுரை என்ற பெயரில் ஒரு கடிதம் எங்களது அலுவலகத்திற்கு வந்துள்ளது. தமிழில் எழுதப்பட்டுள்ள அதில், தொடர்ந்து தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக செய்தி வெளியிட்டு வருகிறீர்கள். இதனால் எனது மனம் புண்பட்டுள்ளது.

உடனடியாக அந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், இந்த செய்தியை அளித்த நபரும், அவரது குடும்பத்தினரும் கொடூரமாகக் கொல்லப்படுவார்கள். அப்படி நடந்தால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.

தொடர்ந்து தா.கி குறித்த செய்தியை ஒளிபரப்பி வந்தால் மதுரையில் தினகரன் நாளிதழுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதிதான் ஏற்படும். அதே விலையை ஜெயா டிவியும் தர நேரிடும்.

மதுரைக்கு அடுத்த மாதம் வரும் தனது முடிவை ஜெயலலிதா வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளதாக சுனில் தெரிவித்தார்.

இதுகுறித்து டிஜிபிக்கும் புகார் மனுவை அனுப்பியுள்ள ஜெயா டிவி நிர்வாகம், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், ஜெயா டிவி அலுவலகத்திற்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

2வது மிரட்டல்:

ஆகஸ்ட் 28ம் தேதியும் இதேபோல ஒரு மிரட்டல் கடிதம் ஜெயா டிவி அலுவலகத்திற்கு வந்தது. மதுரை மாவட்டம் கள்ளந்திரியிலிருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் அக்கடிதத்தில், மதுரைக்கு ஜெயலலிதா வரக் கூடாது. அண்ணனைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. மீறி வந்தால் கொடூரமாக குண்டு வைத்துக் கொல்லப்படுவார் ஜெயலலிதா என மிரட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வைகைப் புயல் பாலு என்ற பெயரில் மீண்டும் ஜெயா டிவி அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்தவர்: ரவி
பதிவு செய்தது: 04 Sep 2010 7:45 pm
தினகரன் அலுவலகத்தில் முன்று அப்பாவிகளை தீயிட்டு கொன்ற கருணாநிதியின் மகன் அழகிரி, எங்கே திரும்பவும் அதிமுக ஆட்சி வந்து விடுமோ என்ற அச்சத்தில் இது போன்று மிரட்டல்களில் இறங்கியுள்ளார்.


பதிவு செய்தவர்: mani
பதிவு செய்தது: 04 Sep 2010 7:00 pm
3 மாணவிகளை உயிரோடு கொளுத்திய அதிமுக ரவுடி கும்பலுக்கு தன் சகாக்களை விட்டு ஆறுதல் சொல்ல சொல்லியுள்ள இவர் நல்லவரா? உலகிலையே மனிதாபிமானம் உள்ளவர்கள் இப்படி ஒரு ஈன செயலை செய்வார்களா? தன் உயிர் மாத்திரம் பெரியது! உசத்தி! என்று சுற்றி திரியும்............ என்னவென்று சொல்ல? இந்த கொலை வழக்கின் தீர்ப்பை மறைக்கவே இப்படி பட்ட நாடகத்தை அரங்கேற்றிகொண்டு இருக்கிறார் "பொய் செல்வி" ஜெ ஜெ. irantha maanavikalin uravinarkalukku ithuvarai ஆறுதல் solliiruppaaraa? aanaal தன் katchikkaaranukku ஆறுதல்?

கருத்துகள் இல்லை: