புதன், 1 செப்டம்பர், 2010

மீண்டும் நல்லூர் நாவலரின் சிலை? ரொம்ப முக்கியம் பாருங்கோ!

ஆறுமுக நாவலரின் உருவச் சிலை இன்று நல்லூர் கலாசார மண்டபத்திலிருந்து நல்லூர் மணி மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நல்லூர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஆறுமுகநாவலரின் உருவச் சிலை அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கலாசார மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதனை மீண்டும் மணி மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டுமென மக்கள் பிரதிநிதிகள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு மீண்டும் சிலை பழைய இடத்திற்கு கொண்டு வருவதென தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் இன்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் பிரதான வீதியூடாக கலாசார மண்டபத்திலிருந்து மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. மங்கள வார்த்திய சகிதம் கொண்டு வரப்பட்ட உருவச்சிலையை மக்கள் பூரண கும்பம் வைத்து வழிபாடு செய்தனர்.

நல்லூர் கோயிலை அடைந்ததும் கோயில் வீதியைச் சுற்றிய பின்னர் மணி மண்டபத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட இடத்தில் ஆறுமுகநாவலரின் சிலை வைக்கப்பட்டு சிறப்புப் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நல்லை ஆதீன குருமுதல்வர் சமயப் பெரியார்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதேவேளை புதிய மணி மண்டபத்திற்கான அடிக்கல்லும் இன்று நாட்டி வைக்கப்பட்டு;ளளது. அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் உள்ளிட்டோர் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Who is this navalar?
நாவலருக்கும் நல்லூர் முருகப்பெருமான் ஆலயத்திற்கும் நல்ல தொடர்புகள் அவரது காலத்திலேயே இருந்ததில்லை. முதலில் நாவலரின் ஆத்மிக ஈடுபாடு மிகவும் கேள்விக்குரிய ஒன்றாகும்.
நல்லை நகர் நாவலர் நல்ல தமிழ் பண்டிதர்தான். புனித விவிலியத்தை பேர்சிவல் பாதிரியாரின் உதவியோடு மொழிபெயர்த்தவர். பால போதினி சைவ போதினி போன்ற சிறார் கல்வி நூல்களை எழுதி பதிப்பித்தவர். அன்னாரின் சேவைகளை பாராட்டி நாமும் கும்பலில் கோவிந்த போட்டுவிடலாம் என்றால் சில வரலாற்று உண்மைகளை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியம் வந்த்திருக்கின்றது. அன்னாரின் உருவச்சிலையை மீண்டும் நல்லூர் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்ய உத்தேசிப்பதாக அறிகிறோம்.
வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் திரு அருட்பாக்களை அவைகள் மருட்பாக்கள் என்று மகா மட்டமாக பிரசாரம் செய்ததோடல்லாமல் நீதிமன்றில் வழக்கும் தொடுத்து அந்த மகானின் தெய்வீகத்தை கொச்சை படுத்தி ஈழத்தவர்க்கு தீராத களங்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
ஜாதி வெறி பிடித்த ஆதீனங்களின் ஏவல் பேயாக செயல் பட்டு கடைசியில் நீதி மன்றத்தில் தோல்வியும் கண்டு ஆன்மீக வாதிகள் எல்லாம் பழிக்கும் ஒரு நிலையை நம்மவர்க்கு ஏற்படித்தி தந்தவர் நாவலர். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய அருட்பெரும் ஜோதியாம் வல்லரரின் மனதை நோகடித்தவர.
தனது  நூல்களில் எல்லாம் சமய குரவர்களை பற்றி குறிப்பிடும் பொது தவறாமல் ஜாதியை குறிப்பிடிவது வழக்கம். இது எப்படி ஆத்மீகத்தை வளர்க்கும்? உயர்குடி வெள்ளாள மரபினை சேர்ந்த ஒழுக்க சீலர் என்பது போன்ற வார்த்தை பிரயோகங்கள் இவரது போதிநிகளில் காணலாம். இந்த உயர் குடி வெள்ளாள அல்லது வேளிர் குளம் என்ற சொற்பதங்கள் தான் இன்று வரை மணமகள் தேவை போன்ற விளம்பரங்களில் இருக்கும் ஜாதிய அடையாளம். அழுத்தமாக மீண்டும் மீண்டும் உயர்குடி என்ற பதத்தை இவர் அச்சடித்து விஷ விதையை தமிழ் மக்கள் மனத்தில் ஆழமாக பதித்து விட்டார். இவரின் போதிநிகளை உயர்குடி வெள்ளாளர அல்லாத மாணவன் படிக்கும் பொது அவனின் மனம் என்ன பாடு படும் என்று இந்த ஜாதி வாதிக்கு தெரியவில்லையே?
எந்தகாலத்திலும் இவர் நல்லூர் கோயிலுக்குள் சென்றது கிடையாது என்றும நம்பப்படுகிறது. ஏனெனில் சரியான ஆகம விதிகள் நல்லூரில் கடை பிடிக்க படுவதில்லை என்பது இவரது கருத்தாகும்.   இவர் ஒரு ஆத்மிக வாதியல்ல மாறாக ஆகம வாதியாகும். இந்த ஆகம வாதிகள் ஆண்டவனே நேரில் வந்தாலும் தமது ஜாதி அனுஷ்டனங்கள் மற்றும் ஆகம விதிகள் தான் மென்மையானவை என்று முரட்டு பிட்வாதம் பிடிக்கும் சமய வாதிகள். சரியாக சொல்லப்போனால் ஒரு வகை தாலிபான்கள் என்றும் சொல்லலாம். இவரது காலத்தில் ஈழத்தில் கோயில் பூசாரிகளாக பிராமணர்கள் இருந்ததில்லை. சாதாரண குடிமக்களே பூஜாரிகளாக இருந்துள்ளனர். நாவலரின் காலத்தில் தான் பெரும் பாலும் தமிழக பிராமணர்கள் எழத்து கோயில்களில் நுழைய தொடங்கினார்கள். நாவலர் ஏன் பிராமணர்களில் அக்கறை காட்டினார் எனில், பெரும்பாலான கோயில்களில் வெள்ளாளர் அல்லாதவர்கள் தான் பூஜாரிகளாக இருந்தார்கள். தனது சாதி அபிமானம் அவர்களை பூசகர்களாக ஏற்க மறுத்தமையால் தமிழகத்தை பின்பற்றி பிரமான சமுகத்தின் கைகளில் ஈழத்து கோயில்களை தாரைவார்க்கும் முயற்சியை மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை: